நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Video: ஒரு மரத்தின் மரணம்.. இப்படித்தான் பல மரணங்கள்.. ஆங்காங்கே!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தண்ணீர் இல்லை.. தண்ணீர் இல்லை.. உலகம் முழுவதும் வலுத்து வரும் சோகக் குரல் இது. ஆனால் தண்ணீர் எல்லாம் எங்கே போனது.. மனிதனின் திட்டமிடாத மற்றும் திட்டமிட்ட முட்டாள்தனமான செய்கைகளே இதற்கு காரணம்.

மரங்கள் இன்று அழிந்து வருகின்றன.. அழித்து வருவது இயற்கை அல்ல.. அந்த இயற்கைக்கு முற்றிலும் நேர் மாறாக போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள்தான். ஒரு மரத்தின் மரணம் இப்படித் தான் அங்கங்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது . அதை பற்றியது தான் இந்தப் பதிவு..

A death of the tree

ஒரு வீடு கட்ட ஒரு பெரிய கட்டடம் கட்ட ஒரு அப்பார்ட்மெண்ட் கட்ட என்று ஓன்று அல்ல எத்தனையோ மரங்களை சராமரியாக வெட்டி தீர்த்து கொண்டிருக்கிறோம். அதன் தாக்கம் என்னவென்று உணர்ந்திருக்கிறோமோ அதை சரி செய்ய நாம் வேறு என்ன செய்கிறோம் என்பது மிகப் பெரிய கேள்வி தான்..

அது மட்டுமா கட்டடம் கட்ட பல மரங்கள் வெட்டி முடித்து அதோடு நின்று விடுகிறார்களா இல்லையே. அப்புறம் அந்த கட்டடத்தின் முகப்பு தெரியவில்லை என்று சாலையோர மரங்களை கூட பெரிய பெரிய கடைகள் இப்போது வணிக வளாகங்கள் என்ற பெயரில் வெகு சாதாரணமாக செய்து வருகிறது நம்மில் பலர் கண்கூடாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

சென்னையில தண்ணீர் தட்டுப்பாடு , தமிழ்நாட்டில் பல ஊர்களில் வறட்சி என்று கேள்விப்படும்போதெல்லாம் உச்சு கொட்டும் நாம் இதை தாண்டி என்ன செய்யலாம் என்று வாங்க பார்க்கலாம் இந்த வீடியோவில் ஒரு மரத்தின் மரணத்தை பற்றிய இந்த பதிவை பார்த்துட்டு உங்க கருத்துகளையும் பதிவு பண்ணுங்க. அப்படியே நாலு மரத்தையும் நட முயற்சி பண்ணுங்க.

- Inkpena சஹாயா

English summary
Chennai and many other parts of the world are running without water. Here is an event which saw the death of a tree.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X