நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு பெண்… 5 இளைஞர்கள்.. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஆட்டம் பாட்டம்.. விசாரித்தால் விஷயமே வேற

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்வு-வீடியோ

    நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    ஒரு இளம்பெண்... அவருடன் 5 இளைஞர்கள்... பின்னாடியே கானா பாலாவின் பாட்டு... திடீரென பட்டப் பகலில் ஒன்று கூடி அனைவரும் முன்னிலையில் ஆடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு நிகழ்வை கண்டு முதலில் குழம்பித்தான் போனார்கள் நாகர் கோவில் பகுதி மக்கள். பின்னர் என்ன ஏது என்று கேட்க..சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா என்பதை அறிந்தனர்.

    சாலை பாதுகாப்பு விழா

    சாலை பாதுகாப்பு விழா

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 30 ஆவது சாலை பாதுகாப்பு வாரவிழா நேற்று தொடங்கி வரும் 10 ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அதன் படி பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    உற்சாகமாக கொண்டாடினர்

    உற்சாகமாக கொண்டாடினர்

    அதன் ஒரு பகுதியாக... பரபரப்பான நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு விழா வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பதன் தேவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

    அசத்திய நடன கலைஞர்கள்

    அசத்திய நடன கலைஞர்கள்

    நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடனங்கள் ஆடியது... அங்கு கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போக்குவரத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள், பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்வது எப்படி என்பது குறித்து போலீசார் ஒலிபெருக்கியில் மக்களுக்கு விளக்கி கூறிக் கொண்டிருந்தனர்.

    பொதுமக்கள் ரசிப்பு

    பொதுமக்கள் ரசிப்பு

    அவர்கள் விதிகளை கூறிக்கொள்வது ஒரு பக்கம் இருந்தாலும்... நடன கலைஞர்களின் ஆட்டத்தை பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளும், பொது மக்களும் கண்டு ரசித்தனர். இது குறித்து பேசிய போலீசார் கூறுகையில், போக்கு வரத்து விதிகளை எப்படி பின்பற்றுவது, விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்வாறு செய்திருக்கிறோம் என்று கூறினர்.

    English summary
    A traffic awareness programme conducted by police department in Nagercoil bus stand.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X