நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொடநாடு சர்ச்சையை அடக்க ஜாக்டோ ஜியோ போராட்டத்தை வளர்க்கிறதா அரசு.. அமீர் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகர்கோவிலில் இயக்குநர் அமீர் பேட்டி-வீடியோ

    நாகர்கோவில்: 1 மணி நேரத்தில் முடியவேண்டிய ஜாக்டோ ஜியோ பிரச்சினையை வளர்ப்பதற்கான காரணம் என்ன? என்று இயக்குநர் அமீர் கேட்டுள்ளார்.

    கொடநாடு சர்ச்சை தற்போது அடங்கி உள்ளது இதை மறைப்பதற்காக கூட அரசே ஜாக்ட்டோ ஜியோ போராட்டத்தை வளர்க்கலாம் என நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ameer suspects govts intention on jacto geo protest

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நகர்கோவிலுக்கு வந்த இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசுகையில், 1 மணி நேரத்தில் முடிய வேண்டிய ஜாக்டோ ஜியோ பிரச்சினையை வளர்ப்பதற்கான காரணம் என்ன? கோடநாடு விவகாரத்தில் உள்ள சர்ச்சை தற்போது அடங்கி உள்ளது. இதை மறைப்பதற்காக கூட அரசே போராட்டத்தை வளர்க்கலாம்.

    சுதந்திர இந்தியாவில் பல 100 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டன இந்திரா காந்தி காலத்தில் இருந்து சொல்ல முடியாத அளவிற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த திட்டத்தாலும் மக்களுக்கு பயன் இல்லை.

    நாட்டில் பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழையாகவே இருக்கிறான். ஜாக்டோ ஜியோ வுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட முதல்வரோ, துறை அமைச்சர்களோ தயாராக இல்லை.

    கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த போதும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது, அதன் மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறித்து எந்த திட்ட அறிவிக்கையும் இல்லை.

    நாம் தமிழர் கட்சி, திருமாவளவன், சகாயம் போன்றோருடன் நெருக்கமாக உள்ளேன், பாராளுமன்ற தேர்தலின்போது பாஜக வை வீழ்த்த நினைப்பவர்களுடன் சேர்ந்து பணிபுரிவேன். தமிழ் தேசிய உணர்வு, மாற்றம் தேவை என நினைப்பவர்கள் ஓர் அணியில் இருந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார் அமீர்.

    English summary
    Ameer has suspected TN govt's intention on Jacto geo protest.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X