நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பப்பாளி வளர்த்தால்.. ஒரு காய் கூட வரலை.. வெறும் பூதான்.. காரணம் அதிகாரிகள்.. குமுறும் விவசாயி!

Google Oneindia Tamil News

Recommended Video

    பப்பாளி மரத்தில் ஒரு காய் கூட வரல.. வெறும் பூ மட்டும் தான்..குமுறும் விவசாயி!-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பப்பாளி போட்டும் காய் வராமல் வெறுமனே பூ மட்டுமே விடுவதால் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மீது விவசாயி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி சகாயம். இவர் கடந்த 15வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்து வருகிறார். விவசாயி சகாயம் கடந்த மே மாதம் கன்னியாகுமரி தோட்டக்கலை அதிகாரிகளின் ஆலோசனைப்படி மஞ்சாலுமூடு அருகே முக்கூட்டுக்கல் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ரெட்லேடர், கோவை போன்ற ஐந்நூறு பப்பாளி கன்றுகளை வாங்கி நடவு செய்ததாக கூறப்படுகிறது.

    arumanai papaya farmer complains agri officer for failed crop

    ஆனால் மூன்று மாதம் பராமரித்து மகசூல் வரும் வேளையில் சுமார் நாநூற்றுக்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகள் காய் காய்க்காமல் பூ பூத்து குலுங்குவதால் அந்த கன்றுகள் முழுவதும் ஆண் கன்று என்று உறுதி செய்த விவசாயி தோட்டக்கலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த பதிலும் கூறாமல் விவசாயியை அலக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

    காலை முதல் செம மழை.. குளுகுளு சென்னைகாலை முதல் செம மழை.. குளுகுளு சென்னை

    எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நஷ்டமடைந்த விவசாயி -க்கு பப்பாளி கன்றுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் மேலும் தமிழகத்தில் இது போன்று விவசாயிகள் ஏமாந்து போகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    English summary
    Kanyakumari Papaya farmers are upset over the Horticulture officers for wrong guidance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X