நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உணர்வார்கள்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில், கிரிஜா வைத்தியநாதனுக்கு ஸ்டாலின் பகிரங்க எச்சரிக்கை

Google Oneindia Tamil News

நாகர்கோயில்: தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு, கன்னியாகுமரி தேர்தல் பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

கன்னியாகுமரி லோக்சபா, தொகுதியில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாகர்கோவிலில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, மத்திய, மாநில அரசுகளை கடும் வார்த்தைகளால் புரட்டி எடுத்தார் ஸ்டாலின். இதோ ஸ்டாலினின் பேச்சிலிருந்து முக்கிய அம்சங்களை நீங்களே, பாருங்கள்:

பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி பாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி

வடை, அடை

வடை, அடை

பிரதமர் மோடி வாயிலேயே வடை சுட்டுக் கொண்டு இருக்கிறார் என்றால், கன்னியாகுமரி தொகுதியின் எம்.பி. பொன் ராதாகிருஷ்ணன் தனது வாயிலேயே அடை சுட்டுக் கொண்டு உள்ளார். கன்னியாகுமரியை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவேன், புற்றுநோய் ஆராய்ச்சி மையம், ரப்பர் பூங்கா, சித்த மருத்துவ கழகம், மீனவர்களுக்கு மீன் சேமிப்பு கிடங்கு, தொலைத் தொடர்பு வசதி போன்றவற்றை செய்து தருவேன் என்றார். கன்னியாகுமரியில் ரயில்வே கோட்டம் அமைப்பேன், நாகர்கோவிலுக்கு சுற்றுச் சாலை அமைப்பேன், என்று ராதாகிருஷ்ணன் உறுதிமொழி அளித்து இருந்தார். இதில் ஒன்றைக் கூட அவர் செய்யவில்லை.

சிறையில்

ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போதே, மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். எனவே ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் நான், இந்த விஷயத்தை சும்மா விட முடியாது. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் அவிழ்க்கப்பட்டு, அதற்கு காரணமாக இருந்தவர்கள் உடனடியாக சிறையில் தள்ளப்படுவார்கள். இதற்காக திமுக ஆட்சி வரவேண்டும் என்று அதிமுகவின் உண்மை விசுவாசிகள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடியிடம் கெஞ்சினேன்

எடப்பாடியிடம் கெஞ்சினேன்

கருணாநிதியின் மறைவில் கூட சித்திரவதை செய்த கூட்டம்தான் எடப்பாடி கூட்டம். பெருந்தலைவர் காமராஜருக்கு இடம் கொடுத்து, பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் கட்டி அழகு பார்த்தவர் கருணாநிதி. ஆனால் அவர் மறைந்தபோது ஆறடி நிலம் கூட தர மறுத்தது எடப்பாடி அரசு. மெரினாவில் கருணாநிதி, உடலை அடக்கம் செய்ய நிலம், ஒதுக்குமாறு எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை பிடித்துக்கொண்டன வெட்கத்தை விட்டு கெஞ்சினேன். அறிஞர் அண்ணாவின் அருகே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பம். அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது தன்மானத்திற்காக, எனது தன்மானத்தை நான் பெரிதாக கருதவில்லை.

கிரிஜா வைத்தியநாதன்

கிரிஜா வைத்தியநாதன்

அமைச்சர்கள் சிலர் இடம் கொடுக்கலாம் என்றும், சிலர் கொடுக்க கூடாது என்றும் கூறியதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. கருணாநிதிக்கு மெரினாவில் இடம் தரக்கூடாது என்று உறுதியாக சொன்னவர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்ற தகவல் எங்களிடம் உள்ளது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போதும் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பில் தான் இருப்பார். இவ்வாறு ஸ்டாலின் கூறியதும், கூட்டத்தினரிடையே கடுமையான ஆரவாரம் சத்தம் எழுந்தது. கைதட்டல் எழுந்தது. இதனால், சிறிது நேரம் நிறுத்திவிட்டு, மீண்டும், பேச்சை ஆரம்பித்த ஸ்டாலின், "நான் பழிவாங்குவதாக சொல்லவில்லை. உணர்வார்கள்". இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

English summary
Tamil Nadu chief secretary Girija Vaidyanathan was the reason behind the government decision on daniel of land for Karunanidhi burial, says MK Stalin in Nagercoil public rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X