நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆண்ட்டி"யின் பகீர் செயல்.. போதை ஊசி போட்டு.. நர்சிங் மாணவியை கடத்தியதாக பெண் மீது புகார்

நர்சிங் மாணவியை கடத்தி வைத்துள்ளாக பெண்மணி ஒருவர் மீது புகார் அளித்துள்ளனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    போதை ஊசி போட்டு.. நர்சிங் மாணவியை கடத்தியதாக பெண் மீது புகார்- வீடியோ

    நாகர்கோவில்: போதை ஊசியை போட்டு நர்சிங் மாணவியை தன் கட்டுப்பாட்டில் ஒரு பெண்மணி வைத்திருப்பதாகவும், மாணவியை மீட்டுத் தர வேண்டும் என்றும் கலெக்டர் ஆபீசில் மனு தரப்பட்டுள்ளது.

    குமரியில் ஒரு பிரபல தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வருகிறார் அந்த மாணவி. சின்ன வயசில் இருந்தே தன்னுடைய அம்மாவின் தோழியின் வீட்டுக்கு அடிக்கடி செல்வார். மகள் மீது தன்னுடைய தோழி இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரே என்று தாய் நினைத்து பூரித்ததுண்டு.

    ஆனால் நாளடைவில் மகளின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. சரியான போக்காக அது தெரியவில்லை. அது மட்டுமில்லை, தன்னுடைய தோழியின் பழக்கத்தால், மகள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதும் தெரிந்தது.

    இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு இந்தாங்க இதுதான் கடிச்சது.. பாம்பும் கையுமாக ஆஸ்பத்திரிக்கு வந்த சுல்தானா.. மும்பையில் பரபரப்பு

    மீட்டார்

    மீட்டார்

    இதனால் அதிர்ச்சியான தாய், "என் ஃபிரண்டு கிட்ட நீ பேச வேண்டாம், அந்த வீட்டுக்கும் போக வேண்டாம்" என்று அட்வைஸ் செய்தார், எச்சரிக்கையும் செய்தார். ஆனால் போன மே மாதம், மகளை காணோம். அப்போதுதான், அந்த பெண் மகளை வீட்டுக்கு திரும்பவும் அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பொறுக்க முடியாத தாய், குளச்சல் போலீசில் புகார் தந்து, 3 நாளைக்கு பிறகு மகளை மீட்டார்.

    கல்லூரி

    கல்லூரி

    இருந்தாலும் அந்த பெண்மணி விடவே இல்லை. மாணவி காலையில காலேஜ் போனால், வழியிலேயே அவளை தடுத்து நிறுத்தி, தன் வீட்டுக்கு கூட்டி சென்று, சாயங்காலம் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். இப்படியே மாணவி பல நாள் காலேஜ்-க்கு போகவே இல்லை. இந்த விஷயமும் அம்மாவுக்கு லேட்டாகத்தான் தெரிந்தது.

    பயமா இருக்கு

    பயமா இருக்கு

    எத்தனை முறை சொல்லியும், அவங்க வீட்டுக்கு ஏன் போறே? என்று உலுக்கி கேட்ட பின்னர்தான், "என்கூட நீ வீட்டுக்கு வந்து போவதை யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால், உன் குடும்பத்து ஆளுங்க மீது ஆசிட் வீசி கொன்னுடுவேன்னு மிரட்டினாங்க. அதனாலதான் சொல்லல" என்று கதறி அழுதுள்ளார். "சரி.. அழாதே.. நாம போலீசில் சொல்லுவோம்" என்று தாய் சொல்லவும், "வேணாம்.. எனக்கு பயமா இருக்கு" என்று தடுத்துள்ளார்.

    மனநிலை

    மனநிலை

    இந்த நிலையில் கடந்த 2ம் தேதி, மாணவியை டூவீலரில் உட்கார வைத்து திரும்பவும் அந்த பெண் அவரது வீட்டுக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரப்பட்ட தாய், "மனநிலை பாதிக்கப்பட்டவர் போல உள்ள தனது மகளை மீட்டு உரிய சிகிச்சைக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திரும்பவும் குளச்சல் போலீசில் புகார் சொல்லி உள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை பெரிதாக எடுக்கவில்லை போல தெரிகிறது.

    கலெக்டரிடம் மனு

    கலெக்டரிடம் மனு

    அதனால் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த விஷயத்தில் இறங்கி உள்ளனர். "மாணவியை கடத்தி வைத்துள்ள பெண் மீது ஏற்கனவே நிறைய வழக்கு உள்ளது. சிபிசிஐடி விசாரணை வளையத்தில் இருக்கிறார். மாணவிக்கு போதை ஊசி போட்டு தவறான செயலுக்கு அந்த பெண் பயன்படுத்தி இருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது. மாணவியும் மனநிலை பாதித்தவர் போல் இருக்கிறார். அவரை மீட்டு உரிய சிகிச்சைக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சொல்லி கலெக்டர், எஸ்பியிடம் இவர்கள் மனு அளித்துள்ளார்கள்.

    English summary
    Complaint about Kidnapping Nursing College Girl by a Woman in Kanniyakumari Collectorate and SP Office
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X