நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகரீகம் வேணாமா? ஓட்டுக்காக எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாமா? பொன்.ராதா கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓட்டுக்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாத்தலாமா?.. பொன்.ராதா கேள்வி-வீடியோ

    நாகர்கோவில்: ஓட்டுக்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நிலைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அதன் வேட்பாளர்களும் வந்துள்ளதாக குமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குமரி வேட்பாளரான தனக்கு ஓட்டுப்போடு வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். அப்பேது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், அம்மாவால் கட்டி காக்கப்பட்டு எந்த வித பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் உழைக்கும் அதிமுக தொண்டர்களை டிடிவி தினகரன் ஏளனம் செய்வது அம்மாவையே அவமானப்படுவது போல் உள்ளது.

    congress and dmk cheating people for vote so many ways: says pon Radhakrishnan

    வெற்றி பெறுவதற்கு கடுகளவும் வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ், ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியுள்ளது. ஓட்டுக்காக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற நிலைக்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும் அதன் வேட்பாளர்களும் வந்துள்ளனர்.

    நீட் தேர்வை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. ஆனால் அதை அவர்கள் அமல்படுத்தாததால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பாஜக அரசு அதை நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து நீட்டை ரத்து செய்வோம் எனக் கூறுகிறார்கள். பின்னர் நீதிமன்றத்தை காரணம் காட்டி செயல்படுத்த மாட்டார்கள்.

    புதிதாக அரசியலுக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், வந்த உடன் கெட் அவுட் மோடி என்று கூறுகிறார், உதயநிதி ஸ்டாலின் அரசியலில் இருந்து கெட்அவுட் ஆகாமல் இருக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். தற்போது இருக்கும் சில அரசியல்வாதிகள் குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.

    English summary
    Pon Radhakrishnan criticise congress manifesto : he says, congress and dmk cheating people for vote so many ways.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X