நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாரை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணனும்னுகூட அவங்கதான் சொல்வாங்க.. சர்வாதிகார ஆட்சி.. குஷ்பு

கன்னியாகுமரியில் வசந்தகுமாரை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் செய்தார்.

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: "பாஜக ஆட்சியில் அவங்க சொல்றதைதான் சாப்பிடணும், யாரை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணனும்னுகூட அவங்கதான் சொல்வாங்க. அந்த அளவுக்கு ஒரு சர்வாதிகார ஆட்சி" என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

சீட் கிடைக்கும் என்று ரொம்ப நம்பி இருந்தார் குஷ்பு. ஆனால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கே தேனியில் சீட் தரப்பட்டது. இதனால் நொந்துபோன குஷ்பு பிரச்சாரத்துக்கு கூட வராமல் இருந்தார். இது மீடியால் பெரிய விவாதமாக வெடித்து கிளம்பியது.

பின்னர் "அதெல்லாம் ஒன்னுமில்லை.. நான் பிரச்சாரத்தில் தான் இருக்கிறேன். ஜெயிலுக்கு போறேன்.. ஜெயிலுக்கு போறேன்னு என்னால வடிவேலு மாதிரி சொல்ல முடியாது" என்று ஒரு விளக்கமும் தந்தார். இதையடுத்து பிரச்சாரங்களிலும் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.

இது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம் இது சூர்யாவின் பன்ச்சா (அ) ரஜினியை பார்த்து மக்கள் கேட்கும் கேள்வியா.. கனல் கக்கும் காப்பான் வசனம்

பணம் வந்ததா?

பணம் வந்ததா?

அந்தவகையில், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பாஜகவை சரமாரியாக விமர்சித்து சொன்னதாவது: "பிரதமர் பேங்கில் 15 லட்சம் போடறேன்னு சொன்னாரே, போட்டாரா? 2 கோடி பேருக்கு வேலை தர்றேன்னு சொன்னாரே.. தந்தாரா? 2 கோடி பேர் வேலை இழந்ததுதான் மிச்சம்.

பணக்கார நண்பர்கள்

பணக்கார நண்பர்கள்

டெல்லியில் விவசாயிகள் 60 நாள் போராடியும் அவங்களை மோடி பார்க்கவில்லை. ஏன் என்றால், பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் அவர் பிரதமராக இருக்கிறார்.

பிடிச்ச சேனல்கள்

பிடிச்ச சேனல்கள்

காங்கிரஸ் ஆட்சியில 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்னைக்கு 950 ரூபாய்க்கு அதிகமாயிடுச்சு. கேபிள் டிவி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆயிடுச்சு. அதாவது உங்களுக்கு பிடிச்ச சேனல்கூட உங்களால் பார்க்க முடியாது. நிறைய பணம் தந்தால் சேனல்கள் பார்க்கலாம் என்பதுதான் நிலை.

சர்வாதிகார ஆட்சி

சர்வாதிகார ஆட்சி

பாஜக ஆட்சியில அவங்க என்ன சொல்றாங்களோ அதைதான் நீங்க கேட்கணும். அவங்க சொல்றதைதான் சாப்பிடணும். யாரை லவ் பண்ணணும், யாரை கல்யாணம் செய்துக்கணும்னுகூட அவங்கதான் சொல்வாங்க. அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சி" என்றார்.

English summary
Kushboo campaigned in Kanniyakumari Constitution for Congress Candidate H Vasantha Kumar and slams PM Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X