India
  • search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முதலிரவு".. பெண்ணை கடித்து குதறிய மாப்பிள்ளை.. "திருநங்கையா"?.. முரட்டுத்தனமான வக்கிர நபர் கைது

Google Oneindia Tamil News

நாகை: முதலிரவு அறையில் இருந்து, கத்திக் கொண்டே வெளியில் ஓடிய, மாப்பிள்ளையை போலீசார் 3வது நாளாக தேடி கொண்டிருக்கிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நாகராஜ் - பரமேஸ்வரி தம்பதியிரின் மகள் நளினி.. இவருக்கு 26 வயதாகிறது..

அறைக்குள் அரங்கேறிய 'அந்த’ நடனம்! குஷியான திருச்சி ஒன்றிய சேர்மன்! யார் அந்த 'மஞ்சள்’ சட்டை விஐபி..?அறைக்குள் அரங்கேறிய 'அந்த’ நடனம்! குஷியான திருச்சி ஒன்றிய சேர்மன்! யார் அந்த 'மஞ்சள்’ சட்டை விஐபி..?

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்து உள்ள தொழுதூரைச் சேர்ந்த 37 வயதான ராஜ்குமார் என்பவருக்கு இவரை திருமணம் செய்து வைத்தனர்.. இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம், கடந்த 27ம் தேதி நடந்தது.

 வரதட்சணை

வரதட்சணை


திருமணம் முடிந்த அன்றைய தினம் இரவு, மணமகன் ராஜ்குமார் நளினியிடம் இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் உறவு வைத்துக்கொண்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதனால், பயந்து போன அந்த புதுப்பெண் அந்த நள்ளிரவு நேரத்தில் அலறி துடித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அலறல் சத்தத்தை கேட்டு, உறவினர்கள் கதவை தட்டி உள்ளே சென்றால், புதுப்பெண் மயங்கி விழுந்ததை கண்டுள்ளனர்.. மணமகன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதால், புதுப்பெண் அலறி துடித்து மயங்கிவிழுந்ததாகவும் தெரிகிறது.

மாப்பிள்ளை

மாப்பிள்ளை

மணமகனும் உடனே அந்த ரூமில் இருந்து ஓடிவிட்டார். இதற்கு பிறகுதான், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசுக்கு சென்று இது தொடர்பாக புகார் அளித்தனர். மயங்கி விழுந்த பெண்ணையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. இந்த செய்தி கடந்த 2 நாட்களாகவே மீடியாவில் வட்டமிட்டு வரும்நிலையில், உண்மையிலேயே அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்தும், மாப்பிள்ளை கைதானது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலிரவு

முதலிரவு

தம்பதியருக்கு மணமகன் வீட்டில்தான், முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததாம்.. முதலிரவு அறையில் அதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் முதலிரவு அறையில், தனிமையில் இருந்து உள்ளனர். அப்போதுதான், இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டுள்ளார் மணமகன்.. இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த பெண் அலறி உள்ளார்.. ஆரம்பத்தில் அந்த பெண்ணின் அலறலை குடும்பத்தினர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. தொடர்ச்சியாக அலறல் சத்தம் கேட்கவும்தான், அந்த ரூமுக்கு ஓடிச்சென்று கதவை தட்டி உள்ளனர்.

திருநங்கை

திருநங்கை

ஆனால், இவர்கள் செல்வதற்குள் அந்த பெண் வலி தாங்க முடியாமல் கீழே மயங்கி விழுந்துவிட்டார்.. வெளியில் இருந்து, குடும்பத்தினர் கதவை பலமாக தட்டவும், பயந்துபோன மாப்பிள்ளை, வேறு வழியின்றி கதவை திறந்து உள்ளார்... ஆனால், கதவை திறந்த வேகத்திலேயே, அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடியிருக்கிறார்... "அது பெண்ணே அல்ல... திருநங்கை" என்று சத்தமிட்டு கொண்டே ஓடினாராம் ராஜ்குமார்.

 ரத்த காயங்கள்

ரத்த காயங்கள்

இதனால் ஒன்றும் புரியாமல் விழித்த குடும்பத்தினர், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் கீழே மயங்கி விழுந்து கிடந்த பெண்ணை பார்த்ததும் பதறிபோனார்கள் குடும்பத்தினர். அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.. திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அதற்கு பிறகுதான் மகளிர் போலீசுக்கு புகார் தர சென்றுள்ளனர். மனநலம் பாதித்தவர் போல நடந்து கொண்ட மாப்பிள்ளை ராஜ்குமாரை உடனே கைது செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை தந்துள்ளனர்..

தனிப்படை

தனிப்படை

தப்பித்து ஓடிய ராஜ்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. தொடர்ந்து 2 நாட்களாகவே போலீசார் ராஜ்குமாரை தேடி வந்த நிலையில், இறுதியில் ராஜ்குமாரை கைது செய்து நாகை மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.. கட்டிய மனைவியாக இருந்தாலும், அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்று தனி சட்டமே இருக்கும் நிலையில், மனைவியின் அனுமதி இல்லாமல் மிருகத்தனமாக, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

மாமியார்

மாமியார்

ஆனால், பெண்ணின் வீட்டிலோ, மாப்பிள்ளை மீது மட்டுமல்லாமல், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜ்குமாரின் தாயார் ராசாத்தி மீதும் புகார் தரப்பட்டுள்ளது. அவர்மீது வழக்கு பதிவு செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, எஸ்பியிடம் புகார் தந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மாப்பிள்ளை மனநிலை பாதித்தவர் என்று பெண் தரப்பில் சொல்கிறார்கள்.. மணப்பெண் "திருநங்கை" என்று மணமகன் சொல்கிறார்.. இரு தரப்பிலுமே மாறி மாறி குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், உண்மைதன்மை எதுவென்று தெரியவில்லை..!

English summary
first night: brutal harassment complaint against new groom and arrested முதலிரவில் ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X