• search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

15 வயது பிஞ்சுவை நாசம் செய்த மாஜி எம்எல்ஏ.. கட்சியிலிருந்து நீக்கம்.. பெற்ற தாயே கூட்டி சென்ற அவலம்!

|

நாகர்கோவில்: 15 வயது சிறுமியை 2 வருஷமாக நாசம் செய்துவிட்டு, தலைமறைவாகி இருந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை குமரி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.. நாஞ்சில் முருகேசனிடம், பெற்ற மகளை அவரது தாயே அழைத்து சென்று உடந்தையாக இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர்.

former aiadmk mla nanjil murugesan arrested in kanniyakumari

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் பல பகீர்கள் வெளியே வந்தன.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்தார்

கடந்த 2017 முதல் இப்படி முருகேசன் தன்னை சீரழித்ததாகவும், அவர் உட்பட பலரும் தம்மை பலாத்காரம் செய்ததாகவும் இதற்கு தன்னுடைய அம்மாதான் உடந்தை என்றும் சொன்னார்.. இதையடுத்து மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் தரப்பட்டது.. அந்த புகாரின் பேரில், சிறுமியின் அம்மா, பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த விஷயம் வெடித்ததுமே நாஞ்சில் முருகேசன் எஸ்கேப் ஆகிவிட்டார்.. அவர் தொடர்ந்து தலைமறாவக இருக்கவும், 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.. மேலும், நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. நாஞ்சில் முருகேசன் எப்படியும் வீட்டுக்கு வருவார் என்பதால், அவருக்கு சொந்தமான வீடுகளை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டது.

இதனிடையே, பாலியல் புகார் வெளியானதை அடுத்து, நாஞ்சில் முருகேசனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அதிரடியாக நடவடிக்கை எடுத்தது.. கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு அதில் தெரிவித்தும் இருந்தது.

புதிய தேசியக் கல்விக் கொள்கை...அமைச்சரவை ஒப்புதல்... என்னென்ன மாற்றங்கள்!!

இந்நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது... இதனையடுத்து திசையன்விளைக்கு விரைந்து சென்ற கன்னியாகுமரி போலீசார் அங்கு பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசனை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் கோர்ட்டிலும் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கு பிறகு போக்சோ நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

15 வயது சிறுமியை அதிமுக முன்னாள் எம்எல்ஏ, பலாத்காரம் செய்த சம்பவம் நாகர்கோவில் மட்டுமல்லாமல் அதிமுக வட்டாரத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
former aiadmk mla nanjil murugesan arrested in kanniyakumari
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X