நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி.. தாறுமாறாக ஓடிய பஸ்.. வீட்டுக்குள் புகுந்தது.. யாருக்கும் காயமில்லை!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: பஸ்ஸை ஓட்டி கொண்டு வந்த டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிடவும்... அந்த பஸ் தாறுமாறாக ஓடி.. ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டது.

நாகர்கோவிலை அடுத்துள்ள பகுதி குலசேகரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு 50 வயதாகிறது.. அரசு பஸ் டிரைவர்.

gov bus driver had heart attack in nagarcoil

நாகையில் இருந்து ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் செல்லும் ரூட்டில் பஸ் ஓட்டி வருகிறார். வழக்கம்போல் நேற்றிரவு பஸ் ஓட்டி வந்து கொண்டிருந்தார் பாலசுப்பிரமணியன். அப்போது மணி 9 இருக்கும்..

தேவசகாயம் மவுண்டிற்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. இரவு நேரம் என்பதால் அந்த பஸ்சில் வெறும் 8 பயணிகள்தான் இருந்தனர். தேரேகால்புதூர் அருகே பஸ் சென்றபோது, பாலசுப்பிரமணியத்திற்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டது.

இதனால், அவரால் ஸ்டியரைங் பிடித்து பஸ் ஓட்ட முடியவில்லை.. வலி அதிகமாக இருக்கவும், அவரது கட்டுப்பாட்டில் பஸ் இல்லை.. அதனால் தாறுமாறாக நடுரோட்டில் சென்றது பஸ்.. இதனால் பஸ்ஸூக்குள் உட்கார்ந்திருந்த பயணிகள் 8 பேரும் அலறிவிட்டனர்.. கம்பியை இறுக்க பிடித்து கொண்டு சத்தம் போட்டனர்.

தமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டிதமிழர்கள் மாதிரி அனைத்து மாநில மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை.. சென்னையில் ப.சிதம்பரம் பேட்டி

அப்போது, பஸ் ரோட்டோரத்தில் இருந்த வீட்டிற்குள் திடீரென புகுந்தது. இதில் அந்த வீடு இடிந்து சேதமானது. ஆனால் அந்த வீட்டிற்குள் யாரும் இல்லை.. அதேபோல பயணிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்து கோட்டார் போலீசார் விரைந்து வந்தனர்.

நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்த பாலசுப்பிரமணியனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப்போது பாலசுப்பிரமணியனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.

English summary
gov bus driver balasubramaniyam had heart attack and saved eight passengers in nagarcoil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X