நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை!

Google Oneindia Tamil News

Recommended Video

    சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை!-வீடியோ

    நாகர்கோவில்: சாலையோரம் நின்றவர் மீது அரசு பேருந்து மோதியதை தொடர்ந்து பேருந்தில் ஏறி ஓட்டுநர் மீது 5 பேர்கள் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அரசு பேருந்து ஓட்டுனர் ஆவார். இவர் இன்று குளச்சலில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்தார். நாகர்கோவில் அருகே புன்னைநகர் சந்திப்புக்கு . பேருந்து வந்த போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது சுரேஷ் ஓட்டி வந்த பேருந்து மோதியது.

    govt bus driver attacked by crowd

    இதில் அந்த நபர் கீழே விழுந்தார். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் சிலர் பேருந்துக்குள் ஏறி டிரைவர் சுரேஷை தாக்கி உள்ளனர். உடனே பேருந்து ஓட்டுனர் சுரேஷ் அந்த பேருந்தை நிறுத்தி விட்டார். தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்து டிரைவர்கள் நடுவழியில் நிறுத்தி டிரைவர் சுரேஷை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தினர்.

    யாராவது இருக்கீங்களா?.. யாராவது இருக்கீங்களா?.. "ஹலோ விக்ரம்!".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா!

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அரசு பேருந்து ஓட்டுனர் சுரேஷை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

    இதனை தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுனர்கள் அங்கிருந்து பேருந்தில் எடுத்துச் சென்றனர். இந்த திடீர் சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடத்த இடத்தில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    A crowd attacked Govt bus driver near Nagercoil and transport staffs staged a protest against the attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X