நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அம்மாடியோவ்.. எவ்வளோ பெருசு.. எங்கெங்கும் மணல் திட்டுக்கள்.. அழகழகாக.. வீடியோ

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: இந்தியாவின் பெரிய மாநிலம் எது தெரியுமா.. தெரியலையா.. சரி விடுங்க.. அமெரிக்காவின் 8வது பெரிய மாகாணம் எது தெரியுமா.. அதுதாங்க கொலராடோ.. அங்குள்ள ஒரு ஸ்பெஷல் குறித்துதான் இந்த மினி கட்டுரை.

கிரேட் சாண்ட் டூன்ஸ் என்பது ஒரு அமெரிக்க தேசிய பூங்காவாகும். இது சான் லூயிஸ் பள்ளத்தாக்கின் கிழக்கு விளிம்பில் 750 அடி (229 மீ) உயரம் வரை பெரிய மணல் திட்டுகளின் பரப்பை கொண்டுள்ள அற்புதமான இடம்.

இந்த வாரம் அனுபவம் புதுமை இன் அமெரிக்காவில் பார்க்கப்போவது இந்த இடத்தை தான். வாங்க அந்த மணல் திட்டுக்கள் வழியாக ஒரு உலா போய் வருவோம்.

எங்கிருக்கிறது

எங்கிருக்கிறது

கிரேட் சாண்ட் டூன்ஸ் என்பது அமெரிக்காவின் தென்-மத்திய கொலராடோவில் உள்ளது. இதற்கு பக்கத்தில் உள்ள விமான நிலையம் டென்வர் விமான நிலையம் .

ரொம்பப் பெருசு

ரொம்பப் பெருசு

இந்த இடம் எவ்வளவு பெரியது என்றால் அதன் அசல் எல்லைகள் 35,528 ஏக்கர் (55.5 சதுர மைல்; 143.8 கிமீ 2) பரப்பிளவு என்றாலே பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பூங்கா 107,342 ஏக்கர் (167.7 சதுர மைல்; 434.4 கிமீ 2) உள்ளடக்கியது.. ஆமாங்க அம்மாம் பெரிசு தாங்க.

அழகிய திட்டுக்கள்

அழகிய திட்டுக்கள்

இந்த பூங்காவில் தான் வட அமெரிக்காவின் மிக உயரமான மணல் திட்டுகள் உள்ளன, இந்த இடம் ஒரு அழகிய அனுபவம். இந்த இடத்தில நடைபோட்டு அந்த இடத்தின் மணல் மேடுகளை குன்றுகளை எல்லாம் பார்த்து அந்த அழகை அனுபவிப்பது ஒரு அற்புத சுகம்...

இயற்கையா செயற்கையா


சரி இந்த மணல் மேடுகள் எல்லாம் எப்படி உருவானது? இயற்கையானதா அல்லது செயற்கையா என்று பார்ப்பவர்களைக் குழப்பும். அப்படி ஒரு அழகிய காட்சி அது. சரி அது எப்படி இருக்கும்... வாங்க பார்க்கலாம். அந்த அனுபவம் உங்களுக்கு இந்த வீடியோ பதிவில் .

அனுபவம் புதுமை இன் அமெரிக்கா.... சுவாரஸ்ய பக்கங்கள் இன்னும் விரியும் .

- Inkpena சஹாயா

English summary
Here we visit the Great Sand of Dunes in Colorado, the eighth largest state in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X