நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

17 சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களா.. குமரி தாங்காதுங்க.. எச். வசந்தகுமார் கோரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரி எம்பி எச். வசந்தகுமார் பேட்டி-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசு திட்டமிட்டு உள்ள சூழலியல் தாங்கு மண்டலங்கள் அமைந்தால் 17 வருவாய் கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்து விடும் என்று கன்னியாகுமரி எம்பி எச். வசந்தகுமார் கூறியுள்ளார்.

    இவை தேவையல்ல எனவும், இது குறித்து திமுக, காங். சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வரை முறையிட உள்ளதாகவும் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    H Vasanthakumar opposes Environmental zones in Kanyakumari

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். ஆஸ்டின், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது அவர்களிடம் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டம் பரப்பில் சிறிய மாவட்டமாக உள்ளது. மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர். மூன்று பக்கம் கடலும், ஒரு பக்கம் மலையும் இடைப்பட்ட பகுதியிலும் மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்

    இந்நிலையில் மத்திய அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் சூழலியல் தாங்கு மண்டலம் அமைக்க 17 வருவாய் கிராமங்களை தேர்வு செய்துள்ளது. இவ்வாறு இந்த பகுதியில் சூழலியல் தாங்கு மண்டலம் அமைத்தால் 17 வருவாய் கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் சிதைந்து விடும்.

    ஏற்கனவே பெரும் பகுதிகள் தனியார் காடுகள் திட்டத்தில் வனப்பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் 17 வருவாய் கிராமங்களை இணைத்தால் மக்கள் வசிக்க முடியாமல் குடியிருக்க இடமின்றி திண்டாடும் நிலை ஏற்படும் என தெரிவித்தார்.

    மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடாவிட்டால் திமுக, காங். சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வரை முறையிட உள்ளதாக தெரிவித்தார்.

    English summary
    Congress MP H Vasanthakumar has opposed Environmental zones in Kanyakumari district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X