நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரியில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம்.. விஜயதரணி புகாருக்கு எச் வசந்தகுமார் பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    விஜயதரணி புகாருக்கு எச் வசந்தகுமார் பதில்

    நாகர்கோவில்: கன்னியாகுமரியில் போட்டியிட கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாக விஜயதரணி கூறிய புகாருக்கு எச் வசந்தகுமார் பதில் அளித்துள்ளார்.

    கன்னியாகுமரி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட எச் வசந்தகுமார் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் இப்போதைக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது குடிநீர் பிரச்சினையாகும்.

    நாகர்கோவிலில் 10, 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது. அதுகூட சில இடங்களில் கிடைப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. அவசரகால தேவை என்பதால் உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் தாகத்தை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்நாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்

    வேலைவாய்ப்பு

    வேலைவாய்ப்பு

    பின்னர் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும். இதற்காக குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் வசந்த் அன்ட் கோ சார்பில் ஒரு பெட்டி வைக்கப்படும். அதில் படித்த இளைஞர்கள் தங்களது சுயகுறிப்புகளை போட்டால் அதை ஆய்வு செய்து பயிற்சி வழங்குவது, வேலைவாய்ப்பு வழங்குவது என ஏற்படுத்தி தரப்படும்.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    குமரியில் தங்கும் விடுதிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள கழிவுகள் கடலில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு சீட் கூட கிடைக்காததால் மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என கருதுகிறேன்.

    கட்சி கட்டுப்பாடு

    கட்சி கட்டுப்பாடு

    வயது முதிர்ந்தவர்கள் கட்சி தலைமையை மிரட்டி சீட் வாங்கியதால் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கூறியுள்ளார். விஜயதரணி மீண்டும் நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் முடிவெடுக்கும். யாராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு வேண்டும்.

    சீட் கொடுத்தது தலைமை

    சீட் கொடுத்தது தலைமை

    நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு யாரிடமும் அழுத்தம் கொடுத்ததில்லை. வெற்றி பெறாது என தெரிந்தும் 2014-இல் குமரியில் நான் போட்டியிட்டேன். அதிக வாக்குகளை பெற்றேன். அதனடிப்படையில் எனக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுத்துள்ளது என எச் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    English summary
    H.Vasanthakumar replies to Vijayadharani MLA that he has not given any pressure to get ticket in Kanyakumari LS constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X