நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்தப் பூ கோலமிட்டு.. பாரம்பரிய உடை அணிந்து.. குமரியில் ஓணம் கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரியில் ஓணம் கொண்டாட்டம் | Onam Celebration in Kanyakumari

    நாகர்கோவில்: கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையான ஓணம் பண்டிகை கன்னியாகுமரி மாவட்டத்திலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று நடைபெற்ற ஓணம் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கேரளா பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

    கோவிலில் பக்தர்களால் பல்வேறு வகையான பூக்களால் போடப்பட்ட பெரிய அளவிலான அத்தப்பூ கோலம் அங்கு கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    மகாபலி வருகை

    மகாபலி வருகை

    கேரளா சமஸ்தானத்தை ஆட்சி செய்த மாமன்னர் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் மக்களை காண வருவார் என்பது ஐதீகம். இந்த நாளை கேரளா மக்கள் ஓணம் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் ஓணம் விழாவில் 9 ஆவது நாள் வரும் திருவோணம் பிரசித்தி பெற்றது.

    குமரியிலும் கொண்டாட்டம்

    குமரியிலும் கொண்டாட்டம்

    அதன் படி இன்று கேரளாவில் திருவோண விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் கேரளா சமஸ்தான ஆட்சியின் கீழ் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்திலும் அன்று தொட்டு இன்று வரை திருவோண திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் படி ஜாதி மதம் மொழிகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் விழாவாக ஓணம் விழா குமரியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அத்தப்பூக்கோலம்

    அத்தப்பூக்கோலம்

    திருவோணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இன்று நடைபெற்ற ஓணம் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கேரளா பாரம்பரிய உடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டன.

    மக்கள் உற்சாகம்

    மக்கள் உற்சாகம்

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு பல்வேறு வகையான பதார்த்தங்களை படைத்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். கோவிலில் பக்தர்களால் ரோஜா, அரளி, பிச்சி, மல்லி என பல்வேறு வகையான பூக்களால் போடப்பட்ட பெரிய அளவிலான அத்தப்பூ கோலம் அங்கு கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    English summary
    Onam festival has been celebrated in Kanyakumari district also today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X