நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குமரி மாவட்டத்தில் வளைத்து வளைத்து வேட்டை.. தெறித்து ஓடும் ஹெல்மெட் அணியாதவர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் போடாதவர்களை வளைத்து வளைத்து பிடிக்கும் போலீஸார்-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஹெல்மெட் போடாதவர்களை வளைத்து வளைத்து போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2138 ( இரண்டாயிரத்து நூற்று முப்பத்தி எட்டு ) வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    helmet raid rocks kanyakumari district

    ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை விபதில்லா மாவட்டமாக உருவாக்க போலீசார் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் படி கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிக்கும் போலீசார் விதிமீறல்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர்.

    முதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்காருனு இன்னும் 2 நாள்ல சொல்றேன்.. தங்கதமிழ்ச் செல்வன் பகீர் பேச்சுமுதல்வர் ஏன் ஃபாரீன் போயிருக்காருனு இன்னும் 2 நாள்ல சொல்றேன்.. தங்கதமிழ்ச் செல்வன் பகீர் பேச்சு

    இந்நிலையில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் படி ஒரே நாளில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுதல், அதி வேகமாக வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டுதல் என 2138 நபர்கள் மீது போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் நடைபெறும் தொடர் சோதனைகளால் போக்குவரத்து விதிமுறை மீறல் கட்டுக்குள் வந்துள்ளது.

    English summary
    Police have intensified the Helmet raids in Kanyakumari district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X