நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்… சொல்லி அடிப்பாரா பொன்.ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதிகள் 1.28 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைத்த ஒரே தொகுதி அது மட்டுமே.

அதிமுக கூட்டணி அற்புதமான தம்பதி.. திமுக கூட்டணி விவாகரத்தான தம்பதி.. அமைச்சர் அடடே பேச்சு அதிமுக கூட்டணி அற்புதமான தம்பதி.. திமுக கூட்டணி விவாகரத்தான தம்பதி.. அமைச்சர் அடடே பேச்சு

வெற்றியும், தோல்வியும்

வெற்றியும், தோல்வியும்

நாகர்கோவில் செய்தியாளரிடம் பேசிய அவர், கன்னியாகுமரி தொகுதியில் தனக்கு எதிர்ப்பே இல்லை என்றார். கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் கூறிய போதிலும் வேறு தொகுதியில் போட்டியிடுவதை தவிர்த்தேன் என்றும் எனது வெற்றியும், தோல்வியும் குமரி மக்கள் கையில் அளித்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பெரும் தலைகள் களமிறங்கும் கரூர் தொகுதி.. அப்படி என்ன சிறப்பம்சம் தெரியுமா?

சாதனைகளைச் சொல்லி வாக்கு

சாதனைகளைச் சொல்லி வாக்கு

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாஜக அரசு செய்திருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது. அந்த சாதனைகளை கூறி நாங்கள் வாக்கு கேட்போம்.

2 லட்சம் வாக்குகள்

2 லட்சம் வாக்குகள்

எங்கள் அணி தான் மிகப்பெரிய வெற்றியை பெறும். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் முதல் நபராக நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்களுக்கு வேலைக்காரனாக உள்ள என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள், அதை நிச்சயம் நான் செய்வேன் என்றும் தெரிவித்தார்.

English summary
I will win by 2 lakh votes says Pon. Radhakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X