நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுற்றுலா தினம்.. கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு சங்குமாலை அணிவிப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    உலக சுற்றுலா தின விழா 2019 கன்னியாகுமரியில் கொண்டாட்டம்-வீடியோ

    நாகர்கோவில்: சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா துறை சார்பில் சங்குமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சர்வதேச சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நேற்று சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ரயில்வே நிலையத்திலும் சுற்றுலா படகுகள் இயக்கப்படும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு படகு தளத்திற்கும் வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலா துறை சார்பில் சங்குமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    international tourism day celebrated in kanyakumari

    கரகாட்டம், ஒயிலாட்டம், பறை உள்ளிட்ட கலை நிகழ்சிகளுடன் சுற்றுலா பயணிகள் கௌரவிக்கபட்டனர். கடற்கரை பீச், படகுத்துறை, சுவாமி விவேகனந்தார் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளை வரவேற்று நிகழ்சிகள் நடைபெற்றது.

    international tourism day celebrated in kanyakumari

    இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்சி அடைந்தனர். இது குறித்து கன்னியாகுமரி சுற்றுலா துறை அலுவலர் நெல்சன் கூறுகையில், உலக சுற்றுலா அமைப்புக்கு இந்த ஆண்டு கொடுக்கப்பட்டு உள்ள குறிக்கோள், சுற்றுலாவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு - சிறப்பான எதிர்காலம் என்ற அடிப்படையில் இந்த உலக சுற்றுலா தின விழா கன்னியாகுமரியில் கொண்டாடப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    English summary
    International Tourism day was celebrated in Kanyakumari by TN govt's TTDC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X