நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தாய் தமிழகத்துடன் குமரி.. மாவட்டம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

நிகழ்சியில் பங்கேற்ற வசந்தகுமார் எம்பி. மொழி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தபட்ட புதுக்கடையில் அமைக்கப்பட்டு காலம் காலமாக மரியாதை செலுத்தி வந்த போராட்டத்தில் பலியான தியாகிகளின் நினைவு ஸ்தூபியை இடித்து உடைத்த தமிழக அரசு மீண்டும் அதனை அமைத்து தர கோரிக்கை விடுவித்தார், இத் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

kanyakumari celebrates the 64th union day today

கண்னியாகுமரி மாவட்டம் பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தனமான கேரளாவின் கட்டுபாட்டில் இருந்தது. 1945 க்கு பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைப்பதற்காண போராட்டம் தொடங்கியது. இதில் மார்ஷல் நேசமணி தலைமை தாங்கிய பின்னர் போராட்டங்கள் அதிகரித்தது. இதில் கேரளா போலீசார் 1954 ல் புதுக்கடை, உள்ளிட்ட பகுதிகளில் நடத்தபட்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர்கள் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து போராட்டங்கள் தீவீரமடைந்ததை தொடர்ந்து 1956 நவம்பர் 1 ஆம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இனைந்தது.

இந்த இனைந்த நாளை ஆண்டு தோறும் மொழி போராட்ட தியாகிகளும் பல்வேறு அமைப்புகளும், பல்வேறு கட்சிகளும் கொண்டாடி வருகின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தான் இந்த தினத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து இந்த தியாக நாளுக்கு பெருமை சேர்த்தார். அதுமட்டுமின்றி நாகர்கோவிலில் மார்ஷல் நேசமனிக்கு மணி மண்டபம் கட்டிக் கொடுத்து மேலும் பெருமை சேர்த்தார்.

kanyakumari celebrates the 64th union day today

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64 ஆவது ஆண்டு தினத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கபட்டது.

kanyakumari celebrates the 64th union day today

நிகழ்ச்சியில் பங்கேற்ற வசந்தகுமார் எம்பி. - மொழி போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தபட்ட புதுக்கடையில் அமைக்கப்பட்டு காலம் காலமாக மரியாதை செலுத்தி வந்த போராட்டத்தில் பலியான தியாகிகளின் நினைவு ஸ்தூபியை இடித்து உடைத்த தமிழக அரசு மீண்டும் அதனை அமைத்து தர கோரிக்கை விடுவித்தார்.

English summary
Kanyakumari celebrated the 64th union day today and collector garlanded the statue of Marshal Nesamani.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X