நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு.. மறக்காம ஓட்டு போட்ருங்க.. இப்படிக்கு உங்களோட செல்ல பாப்பா!

Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி மாணவ மாணவியர்கள் நூறு சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பெற்றோர்களுக்கு கடிதம்- வீடியோ

    நாகர்கோவில்: குட்டிக் குழந்தைகளுக்குத்தாங்க உண்மையிலேயே எந்த செயலும் மனதில் ஆழப் பதிகிறது. பெரியவர்கள் கூட எதிலும் அலட்சியமாக இருந்து விடுகிறோம். ஆனால் சிறார்கள் எதையும் சிரத்தையோடு செய்வதில் வல்லவர்கள்.

    இதை மனதில் வைத்துத்தான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்று அருமையான வேலை ஒன்றை செய்துள்ளது.

    தாய் திருநாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அப்பாவும், அம்மாவும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நூறு சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தி திருப்பதிசாரம் அரசு பள்ளி மாணவ,மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதை அவர்களே ஊர்வலமாக அஞ்சலகத்திற்கு மேள தாளங்களுடன் எடுத்துச் சென்று போஸ்ட் பாக்ஸில் போட்டு விட்டு வந்துள்ளனர்.

    கணிக்கமுடியாத தொகுதியாகும் நாகை.. இதுதான் காரணமா?

    லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தல்

    17 வது மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகிறது. எவ்வாறு வாக்களிப்பது. வாக்குச்சாவடிக்குள் சென்று எப்படி வாக்களிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி. வேட்பாளர்களின் பெயரை எப்படி தெரிந்துகொள்ள வேண்டும்.

    4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்!4 தொகுதி இடைத் தேர்தல்.. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.. 2 மாஜி அமைச்சர்களுக்கு சீட்!

    செயல்முறை விளக்கம்

    செயல்முறை விளக்கம்

    வாக்குச்சாவடியை எப்படி அடையாளம் காண வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு செயல்முறைகளை மாவட்டம் தோறும் ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறி வருகின்றனர். அந்தவகையில் அனைவரையும் கவரும் விதத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் புதுமையான நிகழ்வை நிகழ்த்தியுள்ளனர்.

    வித்தியாசமான முயற்சி

    வித்தியாசமான முயற்சி

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் நூற்று சதவீதம் வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர்.

    பெற்றோருக்குக் கடிதம்

    பெற்றோருக்குக் கடிதம்

    அந்த கடிதத்தில்,தாய் திருநாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்காக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அப்பாவும்,அம்மாவும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். என் இனிய வேண்டுகோளை அக்கறையுடன் ஏற்பீர்களா என எழுதப்படிருந்தது.

    ஊர்வலம்

    ஊர்வலம்

    கடிதத்தை எழுதி முடித்தவுடன் அதை பசங்களே எடுத்துச் சென்று தபால் அலுவலகத்திலும் சேர்த்தனர். அதுவும் எப்படி தெரியுமா.. கையில் கடிதத்த எடுத்துக் கொண்ட மாணவர்கள், மேள தாளங்களை வாசித்தவாறு ஊர்வலமாக அஞ்சலகம் சென்றனர். பின்னர் போஸ்ட் பாக்ஸில் அவர்களே கடிதத்தைப் போட்டனர். இதைப் பொது மக்களும் பார்த்துப் பாராட்டிச் சென்றனர்.

    English summary
    A school in Kanyakumari district has come up with a novel way to educate the people of 100% polling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X