நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தையில் மாடு வாங்குவது போல பேரம் பேசுகிறது தேமுதிக.. கே. எஸ். அழகிரி பொளேர் பொளேர்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி பேட்டி-வீடியோ

    நாகர்கோவில்: தேமுதிக, சந்தையில் மாட்டை வாங்குவதற்கு பேரம் பேசுவது போல் சீட் குறித்து பேசி வருகிறது. யாருடன் வேண்டுமானாலும் பேசுவோம் சீட் தான் முக்கியம் என கூறும் அரசியல் கட்சிகளை இளைய சமுதாயம் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 13 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ளும் பிரச்சார கூட்ட தொடக்க விழா குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களிடம் கூறும் போது தேமுதகவை கடுமையாக தாக்கினார்.

    மாறி, மாறி பேசாதீர்... தேமுதிகவுக்கு கே.எஸ். அழகிரி அட்வைஸ்மாறி, மாறி பேசாதீர்... தேமுதிகவுக்கு கே.எஸ். அழகிரி அட்வைஸ்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற பிரச்சார தொடக்க விழா கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அதே கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், வைகோ, தொல். திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

    நட்பை பற்றி அறியாதவர் மோடி

    நட்பை பற்றி அறியாதவர் மோடி

    சென்னையில் மோடி கலந்து கொண்ட மேடை அருவருப்பான மேடை. காங்கிரஸ் கட்சியையும் காமராஜரையும் மோடி வசை பாடி உள்ளார். காமராஜரை அகில இந்திய அளவிற்கு உயர்த்தியது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் நட்பு வட்டாரம் மிக பெரியது. நட்பை பற்றி அறியாத மோடிக்கு அது தெரியாது.

    ராமதாஸுக்கு குட்டு

    ராமதாஸுக்கு குட்டு

    நட்பை பற்றி எடுத்துரைத்தாலும் அது மோடிக்கு புரிய வாய்ப்பு இல்லை. கஜா புயல் பாதிப்பை பார்க்க மோடி வரவில்லை, நிவாரண நிதி அளிக்கவில்லை என குற்றம் சாட்டி தொடர் அறிவிக்கை விடுத்தவர் பாமக தலைவர் ராமதாஸ். இன்று அவர் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ளார்.

    தேமுதிகவின் மாட்டுச் சந்தை

    தேமுதிகவின் மாட்டுச் சந்தை

    தேமுதிக சந்தையில் மாட்டை வாங்குவதற்கு பேரம் பேசுவது போல் சீட் குறித்து பேசி வருகிறது. எந்த பக்கம் சேர்ந்தால் எத்தனை சீட் கிடைக்கும் என பேசுவது அரசியல் நாகரீகம் கிடையாது. யாருடன் வேண்டுமானாலும் பேசுவோம் சீட் தான் முக்கியம் என கூறும் அரசியல் கட்சிகளை இளைய சமுதாயம் ஒதுக்க வேண்டும்.

    காமராஜர் ஆட்சி அமையும்

    காமராஜர் ஆட்சி அமையும்

    தமிழகத்தில் நிச்சயம் காமராஜர் ஆட்சி அமைப்போம். பாஜக மோடி ஆர்.எஸ்.எஸ் போன்றவர்கள் பலவீனமானவர்கள். பாஜக வின் பலவீனமே அவர்களின் கொள்கைதான். மோடி ஆட்சியில் ராணுவ கோப்புகளே காணாமல் போய் உள்ளது. இவர்களின் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றார் அழகிரி.

    English summary
    TNCC president KS Alagiri has blasted DMDK for its bargain with DMK and ADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X