நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விறுவிறுன்னு தயாராகும் விநாயகர் சிலைகள்.. கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் கணேசர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் கோலாகலமாக தயாராகும் விநாயகர் சிலைகள்-வீடியோ

    நாகர்கோவில்: விநாயகர் சதூர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    பாகுபலி விநாயகர், மகேந்திர விநாயகர், சிம்ம வாகன விநாயகர் என கண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பல்வேறு விதமான சிலைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

    இந்துக்களின் முதன் முதற் கடவுள் என போற்றப்படும் விநாயகர் அவதரித்த நாள் விநாயகர் சதூர்த்தியாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்த விநாயகர் சதுர்த்தி விழா பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.

    3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு 3 நாட்கள் தொடர் விடுமுறை.. கூட்ட நெரிசலால் சிக்கி தவித்த சென்னை கோயம்பேடு

    பாலகங்காதர திலகரால்

    பாலகங்காதர திலகரால்

    அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் தலைவராக இருந்த பாலகங்காதர திலகரால் தொடங்கப்பட்ட விநாயகர் விசர்ஜன விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    விநாயகர் சிலைகள்

    விநாயகர் சிலைகள்

    அதன் படி விநாயகர் சதுர்த்தி நாளில் வீதிகள், வீடுகள், தொழில் நிறுவனங்கள், கோவில்களில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சில நாட்கள் பூஜைக்கு பின்னர் அதனை கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    சிலை செய்யும் பணி

    சிலை செய்யும் பணி

    இதனிடையே விநாயகர் சதூர்த்திக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன.

    8500 சிலைகள்

    8500 சிலைகள்

    அகில பாரத இந்து மகா சபா, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத் என பல்வேறு அமைப்புகள் மூலம் குமரிமாவட்டத்தில் பிரதிஷ்டை செய்ய 8500 விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்

    நாகர்கோவில்

    நாகர்கோவில் இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகளை பண்ரூட்டி, தஞ்சை போன்ற பகுதிகளில் இருந்து வருகை தந்துள்ள கலைஞர்கள் உருவாக்கி வருகின்றனர்.

    சிம்ம வாகன விநாயகர்

    சிம்ம வாகன விநாயகர்

    இந்த வருடம் புதிதாக தயாரிக்கப்பட்டு உள்ள பாகுபலி விநாயகர், மகேந்திர விநாயகர், சிம்ம வாகன விநாயகர் போன்ற கண்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள பல்வேறு விதமான சிலைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

    English summary
    Making of Vinayagar idols is on full swing in Kanyakumari as the festival nearing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X