• search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

60 வயசு முருகேசன்.. முதலில் அம்மா.. பிறகு மகள்.. புத்தி தடுமாறி.. அடுத்தடுத்து வெளியாகும்.. பகீர்!

|

நாகர்கோவில்: முதலில் அம்மா.. அப்பறம்தான் அவரது மகள் என 60 வயசு முருகேசனுக்கு புத்தி தடுமாறி உள்ளது.. 15 வயசு பிஞ்சை நாசம் செய்த இந்த அதிமுக பிரமுகரின் விவகாரத்தில் தினந்தோறும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர்.

காணாமல் போன சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததுமே, புகார் தந்திருந்த பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை.. மாறாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்துதான் விசாரித்திருக்கிறார்கள். பெற்றோருடன் தன்னை அனுப்ப வேண்டாம் என்று சிறுமி கதறி அழுதாராம்.

குண்டுகளில் பயன்படும் NH4NO3.. அதீத விஷத்தன்மை வாய்ந்தது.. லெபனானில் பரவிய சிவப்பு வாயு.. பின்னணி!

நாஞ்சில் முருகேசன்

நாஞ்சில் முருகேசன்

2 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் பெற்ற தாய்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 2 வருஷமாக தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார். இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைது செய்தனர்.

4 பேர் கைது

4 பேர் கைது

முருகேசன் தான் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கினாராம்... இதை கேட்டு அதிர்ந்த போலீசார், சிறுமியின் அம்மா, பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் அப்போதே கைது செய்தனர். இதன்பிறகு விசாரணை மும்முரமாக நடந்தது.

தொடர்பு

தொடர்பு

நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.. தான் நாசமா போனதுடன், இல்லாமல் பெற்ற மகளையும் பணத்துக்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார்.. இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள்.. அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார். இவ்வளவும் சிறுமி வாக்குமூலமாக தந்தார்.

வாக்குமூலம்

வாக்குமூலம்

சிறுமியின் முழு வாக்குமூலம் அறிக்கையை குழந்தைகள் நலக்குழுவினர் கலெக்டருக்கு அனுப்பி வைக்க, கலெக்டரும் எஸ்பியும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி, சென்னை டிஜிபி அலுவலகம், மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க, இதன்பிறகுதான் முருகேசனை கட்சியில் இருந்தே தூக்கியது தலைமை.

நெஞ்சுவலி

நெஞ்சுவலி

ஆனால் ஜெயிலில் அடைக்க போகிற நேரத்தில் திடீரென முருகேசனுக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதாம்.. அதனால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செக்கப்புக்காக அழைத்து சென்றனர்.. அங்கு பிரஷர், சுகர் அதிகமாக இருப்பதாக சொல்லி ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் முருகேசன்.. போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது. இப்போதும் அவர் சிகிச்சையில்தான் உள்ளார்.

அம்மா

அம்மா

அம்மாவுடன் உறவில் இருந்தபோதுதான், சிறுமி மீது முருகேசனுக்கு ஒரு கண் போயுள்ளது.. இதை அந்த பெண்ணிடம் சொல்ல, பெற்ற தாயும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதற்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் ஞாலம் ஜெகதீஸ் என்பவர்தபான் சிறுமியின் அம்மாவை நாஞ்சில் முருகேசனுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் சொல்லப்பட்டது.

ஞாலம் ஜெகதீஸ்

ஞாலம் ஜெகதீஸ்

அதனால், அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஞாலம் ஜெகதீஸ் நீக்கப்பட்டு கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டது.. இவரை கட்சியில் இருந்து நீக்கியபிறகுதான், முருகேசன் மீது வழக்கு பாய்ந்துள்ளது.. இப்போது ஞாலம் ஜெகதீஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பாய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஆனால் இதை ஞாலம் ஜெகதீசன் மறுக்கிறாராம்.

தோட்டம்

தோட்டம்

"நானும் நாஞ்சில் முருகேசனும் கட்சி ரீதியாக மட்டுமே நட்பு வைத்திருந்தோம்.. அவரை அவரது தோட்டத்தில் சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோவை இந்த வழக்கில் சிக்கும் முன்பு, என் ஃபேஸ்புக்கில் போட்டேன்.. அதை எடுத்து வைத்து கொண்டு, அந்த சிறுமியின் அம்மாவை நான்தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும் வதந்தி பரப்புகிறார்கள்.

பரபரப்பு

பரபரப்பு

மேலும் இதுகுறித்து எஸ்பி-க்கு ஆன்லைனில் புகார்கூட அனுப்பி இருக்கிறேன்.. முருகேசனுடன் தொடர்பில் இருந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது... இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை" என்றும் ஞாலம் ஜெகதீசன் கூறுகிறாராம். எனினும், கடந்த ஒரு வாரமாகவே இந்த பாலியல் சம்பவத்தின் பரபரப்பு அடங்காமலேயே உள்ளது.

 
 
 
English summary
nagarcoil former aiadmk mla nanjil murugesan case
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X