நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாசமாக்கிட்டான்".. யார் அந்த நடிகை.. லேப்டாப்பில் சிக்கிய தடயங்கள்.. மாட்டிக் கொண்ட காசியின் அப்பா

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: காசியுடன் நெருக்கமாக இருந்த நடிகை யார்? விஐபிக்களின் மனைவி யார்? என்பது தெரியாத நிலையில், அதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாம்.. காசியின் லேப்டாக்களில் தடயங்களை அவரது அப்பா, அழித்ததாக சொல்லப்பட்ட அனைத்து தடயங்களும் மறுபடியும் மீட்கப்பட்டுவிட்டதாம்.

நாகர்கோவிலை சேர்ந்த 26 வயது காசி, கட்டுமஸ்தான உடலை காட்டியே பல பெண்களை அழித்தவர்.. நாசம் செய்தவர்.. மோசடி செய்து பணம் கறந்தவர்.. போலீசார் இது சம்பந்தமான விசாரணையை கையில் எடுத்து வந்தபோதிலும், வழக்கின் தன்மையை கொண்டு மே 27 ஆம் தேதி காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

 Nagarcoil Kasi and his father case issue

தற்போது காசி கைதாகி ஜெயிலில் உள்ளார். இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என பல கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.

ஆரம்பத்திலேயே, சிபிசிஐடி போலீஸார், காசி வீட்டிலும் அவரது நண்பர் டேசன் ஜினோ வீட்டிலும் அவர்களை நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்... அப்போது, காசி வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்களை கைப்பற்றினர். சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது.. சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தன் வலையில் வீழ்த்தி, காரில் வைத்து நெருக்கமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின..

மேலும் காசியின் ரகசிய லேப்டாப்பில் தான் எல்லா வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடிய நிலையில் ரகசிய லேப்டாப் ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் மீட்கப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன.. இதை அழித்தது, காசியின் அப்பா தங்கபாண்டியன் என்றும் தெரிய வந்தது.. மேலும் மகனை காப்பாற்றவே இப்படி எல்லாவற்றையும் அழித்து வைத்தார் என்பது உறுதியானதால், ஜூன் 30-ம் அவர் தேதி அவரை கைது செய்தனர்.. தற்போது விசாரணையின் பிடியிலும் இருக்கிறார் தங்கபாண்டியன்.

அந்த லேப்டாப்களில் யார் யார் இருந்தனர்.. யாருடைய வீடியோக்களை தங்கபாண்டியன் அழித்தார் என்பது தெரியாததால், நடுநடுவே விசாரணை சுணங்கியது.. ஆனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தடயங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.. 80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்தது.

தமிழகத்தில் நவ.23 முதல் மீண்டும் கனமழை... வங்கக் கடலில் சூறாவளி காற்றுதமிழகத்தில் நவ.23 முதல் மீண்டும் கனமழை... வங்கக் கடலில் சூறாவளி காற்று

காசி மீது பதியப்பட்ட நான்கு பெண்கள் ஏமாற்று வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் தற்போது சேர்த்துள்ளனர். தனிப்படை அமைத்து லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். சிறுமிகள் முதல் அம்மாக்கள் வரை, நடிகைகள், விஐபிக்களின் மனைவிகள் என பல தரப்பினரையும் காசி விட்டு வைக்கவில்லை என்று கருதப்பட்ட நிலையில், அனைத்து ஆதாரங்களும் சிக்கி உள்ளன.. இதனால், விரைவில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

English summary
Nagarcoil Kasi and his father case issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X