நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. காசி மீது குவிந்த புகார்.. கிடப்பில் போட்ட போலீஸார்.. தோண்டி எடுக்கும் சிபிசிஐடி

காசி வழக்கு தொடர்பாக போலீசாரையும் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: ஏகப்பட்ட பெண்களை, காம கொடூரன் காசி நாசம் செய்தது தொடர்பாக வந்த புகார்களை போலீசார் விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.. இது குறித்து சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது... அதுமட்டுமல்லாமல், காசி விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் பெரும் திருப்பத்தை இந்த வழக்கில் ஏற்படுத்தி வருகிறது.

26 வயசு நாகர்கோவில் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

உடம்பெல்லாம் காயம்.. திடீரென தற்கொலை, போலீஸ் விசாரணையால் தூக்கிட்டதாக பரபரப்பு.. பதறும் தூத்துக்குடிஉடம்பெல்லாம் காயம்.. திடீரென தற்கொலை, போலீஸ் விசாரணையால் தூக்கிட்டதாக பரபரப்பு.. பதறும் தூத்துக்குடி

சிபிசிஐடி

சிபிசிஐடி

காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்... காசி வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்கள் உட்பட சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்யும் காசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில், மற்றொர நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

 டிராவிட் புகார்

டிராவிட் புகார்

தற்போது, காசி மீதான கந்து வட்டி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்... டிராவிட் என்பவர்தான் கந்துவட்டி குறித்து ஏற்கனவே வடசேரி ஸ்டேஷனில் புகார் தந்திருந்தார்.. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 காஸ்ட்லி பைக்

காஸ்ட்லி பைக்

இந்த பைக் விஷயம்தான் தற்போது விவகாரமாக உருவெடுத்துள்ளது.. பண கஷ்டத்துக்காக காஸ்ட்லி பைக்கை கந்துவட்டிக்கு வைத்துள்ளார் டிராவிட்.. வாங்கிய பணத்தை செலுத்தியும் இந்த பைக்கை காசி தரவில்லையாம்.. அந்த பைக்குக்கா வாங்கிய கடனே இன்னும் அடைக்க முடியாத நிலையில், பைக் ஆவணங்கள் அனைத்தும் காசி பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 வங்கி அதிகாரி

வங்கி அதிகாரி

இதற்கு தனியார் வங்கியில் இருந்தவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இருந்தவர்கள் காசிக்கு உதவி செய்ததாக சொல்கிறார்கள்.. தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருப்பதால் இந்த விபரங்கள் எல்லாம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது... அதனால், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது... இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சம்மன்

சம்மன்

இதைவிட மற்றொரு விஷயமும் கூறப்படுகிறது.. பெண்களை ஏமாற்றியது தொடர்பாக வந்த புகார்கள் பற்றி போலீசார் எதுவுமே இன்னும் விசாரிக்கவே இல்லையாம்.. அந்த புகார்களை எல்லாம் கிடப்பில் போலீசார் ஏன் போட்டார்கள், என்று சிபிசிஐடி போலீசார் விசாரிக்க போகிறார்களாம்... ஆக மொத்தம், ஏற்கனவே யூகிக்கப்பட்டதைபோலவே, காசி விஷயத்தில் ஏகப்பட்டோருக்கு பங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிபிசிஐடியின் அதிரடிகளால் காசி விவகாரம் சூடு பிடித்து வருகிறது.

English summary
nagarcoil kasi case issue: CBCID decide investigate to police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X