• search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஐஏஎஸ் ஆகி போலீஸ்காரர்களை கேள்வி கேட்கணும்.. விஷம் குடித்துவிட்டு மகளிடம் உருகிய குமரி டாக்டர்

|

நாகர்கோவில்: விஷம் குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நாகர்கோவில் டாக்டர் சிவராம பெருமாள், சாவதற்கு முன்பு மகள் குறித்து வாட்ஸ் அப்பில் பேசும் போது, அப்பா சாக போறேன். நீ பெரிய ஐ.ஏ.எஸ். ஆகி, போலீஸ்காரங்களை கேள்வி கேட்கணும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வாட்ஸ் அப் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை இலந்தைவிளை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராமபெருமாள் (43). இவர் திமுக மருத்துவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் டாக்டர் சிவராம பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், என் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள் டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் இலந்தைவிளை விஜயஆனந்த் ஆகியோர் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

சம்யுக்தாவின் ஒரிஜினல்.. வெளியே எட்டி பார்த்த பூனைக் குட்டி.. மிரண்டு போன ரசிகர்கள்!

தகாதவார்த்தையில் திட்டினார்

தகாதவார்த்தையில் திட்டினார்

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்ததில் சில தகவல்கள் வெளியாகின. இதன்படி வெளிநாட்டில் படித்த சிவராமபெருமாள், இந்தியாவில் பதிவு செய்யவில்லையாம், டிஎஸ்பி பாஸ்கரனிடம், இலந்தைவிளை விஜய ஆனந்த் புகார் கூறியிருக்கிறாராம். அதுபற்றி போனில் அவர் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும், சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் காரில் சென்றபோது அவரையும் மனைவியையும் தகாத வார்த்தையால் திட்டியதாகவும் சொல்லப்படுகிறது..இதனால் ஏற்பட்ட விரக்தியில் சிவராமபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எஸ்பியிடம் புகார்

எஸ்பியிடம் புகார்

அத்துடன் டிஎஸ்பி பாஸ்கரன் மீது வழக்குபதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் தெரிவித்தனர். எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் ஆகியோர் எஸ்.பி. பத்ரிநாராயணனை சந்தித்து டாக்டர் சிவராமபெருமாள் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 2 போலீஸ் அதிகாரிகள் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்தார். இதையடுத்து சிவராம பெருமாளின் உடலை பெற்றுக்கொண்டார்கள்.

வைரலான கடிதம்

வைரலான கடிதம்

இந்நிலையில் டாக்டர் எழுதிய கடிதம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இது தவிர, டாக்டரை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளதால் குமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான் சாகப்போகிறேன்

நான் சாகப்போகிறேன்

தற்கொலைக்கு முன் சிவராம பெருமாள் தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளத, அதில், நான் விஷம் குடித்து விட்டேன். வாட்ஸ் அப், பேஸ்புக்குனு எதெல்லாம் உண்டோ? அதில் எல்லாம் போடு. நான் சாக போகிறேன் என்கிறார். அதற்கு அந்த நண்பர், நான் சொல்வதை கேள். இது பற்றி புகார் எழுதி உள்ளேன்.. அவர்களை சும்மா விட வேண்டாம். நீ தைரியமாக இரு என்று கூறுகிறார். ஆனால் சிவராம பெருமாள், நான் விஷம் குடிச்சாச்சு என்கிறார்.

அப்பா சாக போறேன்

அப்பா சாக போறேன்

இப்படியாக உரையாடல் செல்லும் போது சிவராம பெருமாளின், 2 வது மகள் துர்காவும் எதிரில் இருந்துள்ளார். நண்பரிடம் பேசும் போதே, மகளிடம் நீ நல்லா படிக்கணும். அப்பா சாக போறேன். நீ பெரிய ஐ.ஏ.எஸ். ஆகி, போலீஸ்காரங்களை கேள்வி கேட்க வேண்டும் என்பதாக உரையாடல் முடிகிறது. சிவராம பெருமாள் எழுதிய கடிதத்தின் தொடக்கத்தில் துர்கா சாட்சி என்றும் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவரின் தற்கொலை நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
 
English summary
doctor sivarama perumal has allegedly committed suicide by consuming poison at his house in Parakkai near Nagercoil in Kanyakumari district late on Monday. The police have secured a suicide note from his house doctor alleged that one of the senior police officials was threatening him and harassing him constantly which compelled him to take the drastic step
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X