நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் சாதனை முயற்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் சாதனை முயற்சி!

    நாகர்கோவில்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மணிகண்டன் என்ற மாற்றுத்திறனாளி பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை வலியுறுத்தி ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சாதனை சைக்கிள் ஓட்டத்தை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். 36 வயதான இவர் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இடது காலை அகற்றும் நிலை ஏற்பட்டது. தற்போது அரசுப்பணிக்காக தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்.

    nagercoil manikandans record breaking cycling for awareness

    இந்நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, நதிநீர் இணைப்பு,தலைக்கவசம், காவலன் SOS போன்றவற்றிற்கான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்திலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணத்தை இன்று தொடங்கினார். இந்த சாதனை முயற்சி பயணத்தை கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் வாழ்த்து கூறி பச்சை கொடியை அசைத்து துவக்கி வைத்தார்.

    போராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு! போராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு!

    ஒற்றை காலில் சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணிகண்டன் வழிநெடுக மரக்கன்றுகளை நட்டபடியே செல்கிறார். இது மணிகண்டன் மூன்றாவதாக நடத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழிப்புணர்வு பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Nagercoil Manikandan has strated a record breaking cycling for awareness.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X