கட்சி தொடங்க பிப்.15 வரை ரஜினிக்கு டைம்.. இல்லாவிட்டால்.. நாகர்கோவில் மன்ற நிர்வாகி பரபரப்பு வீடியோ!
நாகர்கோவில்: பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி வரை பார்ப்பேன். இல்லாவிட்டால் நானே ரஜினியின் பெயரில் புதிய கட்சியை தொடங்குவேன் என மக்கள் மன்ற நிர்வாகி ஆர் எஸ் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர் எஸ் ராஜன் கூறுகையில் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை பார்ப்பேன். ரஜினி கட்சி தொடங்காவிட்டால் நானே அவரது பெயரில் தொடங்குவேன்.
எப்போதும் ரஜினிகாந்த் நிச்சயம் முதல்வராவார். என்றைக்கு இருந்தாலும் கட்சி ஆரம்பிப்பேன் என ரஜினி சொல்லியிருந்தார். அவரது முடிவில் அவர் மாறினாலும் நான் மாறமாட்டேன்.

அரசியல்
ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவார் என எனக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலிடத்தில் உள்ளவர்கள் எல்லாம் சொல்கிறார்கள், நிச்சயமாக ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்குவார் என்கிறார்கள். அவர் அரசியல் ஆலோசனையில் இருக்கிறார்.

லேட்டானாலும்
முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார். அவர் சந்திக்கும் முக்கிய பிரமுகர்களும் என்னிடம் அவர் நிச்சயம் கட்சியை தொடங்குவார் என்கிறார்கள். லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக தலைவர் வருவார். அவர் ஆரம்பிக்காவிட்டால் பிப்ரவரி மாதம் கடைசியில் நான் நிச்சயமாக அவர் பெயரில் கட்சி ஆரம்பிப்பேன் என்றார்.

ஹைதராபாத்
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக டிசம்பர் 3-ஆம் தேதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாத்த படம் படப்படிப்பின் போது அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ரஜினி
இதையடுத்து அவர் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் கூட வேண்டாம் என்ற மருத்துவர்கள் அறிவுரையின்படி அவர் கட்சி தொடங்குவதை கைவிட்டார். தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் ரஜினி தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அது போல் இந்த சட்டசபை தேர்தலில் தனது ஆதரவு எந்த கட்சிக்கும் கிடையாது என்றும் அறிவித்துள்ளார் ரஜினி.