நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமணம் முடிந்த கையோடு ஜோடியாக வாக்குச்சாவடி வந்த புதுமண தம்பதிகள்-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திருமணம் முடிந்த கையோடு ஜோடியாக வாக்குச்சாவடி வந்த புதுமண தம்பதிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியதை பார்த்து அங்கிருந்து வாக்காளர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஷீபா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடந்தது.

    newly married couple vote in nagercoil after wedding

    ஓட்டு போட போன கர்ப்பிணி நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு?ஓட்டு போட போன கர்ப்பிணி நீலாவதி.. ஓட்டும் போட்டாச்சு.. அப்பறம் என்ன ஆச்சு?

    கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே திருமண தேதி குறிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தேர்தல் தேதியும் திருமண தேதியும் ஒரே நாளில் வந்தது. இதனால் தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று மணமகன் சிவாவுக்கு கவலை ஏற்பட்டது. இது குறித்து மணப்பெண்ணிடம் தெரிவித்தார்,

    newly married couple vote in nagercoil after wedding

    திருமணம் முடிந்ததும் முதல் வேலையாக வாக்குச்சாவடி சென்று வாக்களித்து விடலாம் என மணமகள் கூறினார். இதை தொடர்ந்து திருமணம் முடிந்து உற்றார் உறவினர்கள் புதுமண தம்பதிகள் சிவா மற்றும் ஷீபா ஆகியோரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். தம்பதிகள் நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடிக்கு சென்றனர். அங்கு வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.

    மணகோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து சென்ற மணமக்களை வாக்குச்சாவடியில் கூடி இருந்த ஏராளமான வாக்காளர்களும் வாழ்த்தினர்.

    English summary
    lok sabha elections 2019: newly married couple vote in nagercoil after wedding
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X