நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெல்மட் கழண்டு விழ.. தலையில் ரத்தம் வழிந்தபடியே உயிரைவிட்ட நர்ஸ் ஸ்டெல்லா.. தக்கலை சோகம்

நாகை அருகே டூ வீலரில் சென்ற நர்ஸ் விபத்தில் பலியானார்

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: ஓவர்டேக் செய்யும்போது, பிளாட்பாரத்தில் போய் டூவீலருடன் மோதிவிட்டார் நர்ஸ் ஸ்டெல்லா.. தூக்கி நடுரோட்டில் வீசப்பட்டதில் ஹெல்மட் கழண்டு விழுந்துவிட்டது.. இதில் தலையில் அடிபட்டு.. ரத்தம் வழிந்தபடியே உயிரைவிட்டார் ஸ்டெல்லா!

தக்கலையை சேர்ந்த தம்பதி ஜெயகுமார் - ஸ்டெல்லா ராணி.. ஸ்டெல்லாவுக்கு 38 வயதாகிறது.. நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்-ஆக வேலை பார்த்து வந்தார்.

nurse died on the spot in road accident near nagarcovil

வழக்கமாக ஆஸ்பத்திரிக்கு டூவீலரில்தான் ஸ்டெல்லா வந்து போவார்.. அப்படித்தான் நேற்றும் வீட்டில் இருந்து கிளம்பினார்.. பார்வதிபுரம் பிரிட்ஜ்-க்கு கீழ் வந்தபோது, அவருக்கு முன்னால் ஒரு வண்டி போய் கொண்டிருந்தது.. டியூட்டிக்கு போக வேண்டும் என்ற அவசரத்தில் அந்த வண்டியை ஓவர்டேக் செய்ய முயன்றார்.

அதனால் டூவீலரை வேகமாக ஓட்டினார்.. அடுத்தசெகண்டே தடுமாறி ரோட்டோரம் இருந்த பிளாட்பாரத்தில் போய் மோதிவிட்டார்.. அவரே போய் முட்டிக் கொண்ட வேகத்தில், தூக்கி நடுரோட்டில் வீசப்பட்டார்.
கீழே போய் விழுந்ததில், தலையில் இருந்த ஹெல்மட் கழண்டு விழுந்துவிடவும், தலையில் பலமாக அடிபட்டது... ரத்தம் கொட்ட தொடங்கியதுமே பொதுமக்கள் அவரை மட்க ஓடிவந்தனர்.

"2 சாரும் மேல கை வைக்கிறாங்க.. வீடியோ அனுப்பறாங்க" கதறிய மாணவி.. "தூக்குல போடுங்க" கொதித்த ஊர்மக்கள்

ஆனால் அதற்குள் ரத்தம் சொட்டியபடியே ஸ்டெல்லாவின் உயிர் பிரிந்துவிட்டது.. தகவலறிந்து கோட்டார் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றினர். காலை நேரம் என்பதால், டிராபிக் ஜாம் ஏற்பட்டது.. போலீசார் கடும் சிரமத்துடன் அதனை சீர் செய்தனர்.

இது சம்பந்தமான விசாரணை நடந்து வந்தாலும், பொதுமக்கள் கண் முன்னாடியே நர்ஸ் ஸ்டெல்லா உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

English summary
38 year old private hospital nurse died on the spot in road accident near nagarcovil
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X