நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

களை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா!

Google Oneindia Tamil News

Recommended Video

    களை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா!-வீடியோ

    நாகர்கோவில்: திருஒண பண்டிகை களை கட்டியுள்ளது. வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கத்தை விட விலை குறைவாக இருந்ததால் கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கேரளாவின் வசந்த விழா என்றழைக்கப்படும் திருஒண பண்டிகை நாளை கொண்டாட கேரளா மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக பல்வேறு விதமான வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வாங்க ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவது வழக்கம். காலம் காலமாக இப் பண்டியையை முன்னிட்டு கன்னியகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு காய்கறி சந்தை கூடுவது வழக்கம்.

    அந்தவகையில் ஒன சிறப்பு வாழைத்தார் உள்ளிட்ட காய்கறி சந்தை இன்று நாகர்கோவிலில் கூடியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட வாழை தார்கள், கத்தரிக்காய், வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட அனனைத்து காய்கறிகளும் நகர்கோவிலில் உள்ள சிறப்பு ஓன சந்தைக்கு வந்து குவிந்து உள்ளன.

     கேரள வியாபாரிகள்

    கேரள வியாபாரிகள்

    கேரளாவில் கொல்லம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா மக்களும் அங்குள்ள வியாபாரிகளும் இன்று வந்து குவிந்தனர். இதனால் ஒணம் காய்கறி சந்தை களைகட்டியது. வாழை தார் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கத்தை விட விலை குறைவாக இருந்ததால் கேரளா மக்கள் மகிழ்சியாக வாங்கி சென்றனர்.

    பூக்கள்

    பூக்கள்

    பண்டிகையின் முக்கிய அம்சமான அத்தபூ கோலங்கள் போடுவதற்கு வசதியாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஒண பூ சந்தை கூடியது. திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் தோவாளை பூ சந்தைக்கு பூக்களை வாங்கி செல்ல குவிந்ததால் பூ சந்தை களைகட்டியது.

    தோவாளை பூக்கள்

    தோவாளை பூக்கள்

    மாவேலி சக்கரவர்த்தியை வரவேற்க ஒவ்வொரு வீடுகள் மற்றும் கோவில்களிலும் அத்தபூ கோலங்கள் போட்டு பாரம்பரிய விழாவாக ஒண பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் அத்தபூ கோலங்கள் போடுவதற்கு தேவையான பூக்கள் அனைத்தும் பிரசித்து பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் இருந்து தான் வாங்கி செல்வது வழக்கம்.

    மக்கள் கூட்டம்

    மக்கள் கூட்டம்

    அதற்காக ஆண்டு தோறும் ஒண பண்டிகையை முன்னிட்டு தோவாளை பூ சந்தையில் ஒண சிறப்பு பூ சந்தை கூடுவது வழக்கம். அந்தவகையில் கேரளாவில் நாளை ஒண பண்டிகையை முன்னிட்டு தோவாளையில் இன்று ஒண சிறப்பு பூசந்தை கூடியது. அத்தபூ கோலங்கள் போடுவதற்காக திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் தோவாளை பூ சந்தைக்கு பூக்களை வாங்கி செல்ல குவிந்ததால் பூ சந்தை களைகட்டியது.

    பூ சந்தைக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளதால் வழக்கத்தை விட இன்று பூக்களின் விலைகளும் குறைவாக உள்ளதால் மக்கள் மகிழ்சி அடைந்து உள்ளனர்.

    English summary
    Nagerocoil and Thovalai Onam markets have recieved good response Kerala traders as prices are lesser than last year.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X