நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Video: அழகழகா பூத்திருக்கு.. பறிச்சு சாப்பிட ஆசையா.. வாங்க அமெரிக்காக்கு போகலாம்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்காவில் கோடை காலம் சூடு ஏற தொடங்கி இருக்கிறது .அதனால் ஜில்லுனு ஏசியை ஆன் பண்ணிக்கிட்டு வீட்டில் இருந்துவிடலாம் என்று மக்கள் முடங்குவதில்லை.

காரணம் இங்கு கோடை காலத்தில்தான் எல்லாக் கொண்டாட்டங்களும். குளிர்காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் சூழல் தான் அங்கு பெரும்பாலும் இருப்பதால் கோடை காலத்தில் மக்கள் பட்டாம்பூச்சியென பறக்க தொடங்குகிறார்கள்.

Picking Blueberry fruits

இந்த வேளையில் தான் அங்கு ஆப்பிள் , ஸ்ட்ராபெர்ரி , பளுபெர்ரி போன்ற பழங்களின் சீசன் ஆரம்பித்திருக்கிறது. அதனால் எல்லோரும் ஒரு கூடையை தூக்கிக் கொண்டு ஜாலியா இந்த பழங்களை பறிக்க கிளம்புறாங்க. இதற்காக தொலைவு என்றாலும் கூட பயணம் மேற்கொண்டு பழ தோட்டங்களை தேடி நேரடியா சென்று தங்கள் கைகளாலேயே பறித்து வருகிறார்கள். ரொம்ப ஆரோக்கியமா ஆசையா இதை செய்றாங்க.

Picking Blueberry fruits

குடும்பமாக சென்று குழந்தைகளோடு ஜாலியாக குட்டி குட்டி கைகளால் குட்டி குட்டி பளுஇபெர்ரி பறித்து அவர்கள் கூடையில் சேர்க்கும் விதம் பார்க்கவே வெகு அழகு . நம்ம ஊரில் கூட இப்படி குழந்தைகளை கூட்டிச் சென்று நேரடியாக தோட்டத்தில் விளையும் காய்களையோ பழங்களையோ வாங்க விடுமுறை போன்ற சில நாட்களாவது நாமும் முயற்சிக்கலாம்.

நம் குழந்தைகளுக்கு இயற்கை தோட்டங்களை பார்க்கும் சுகமும் விவசாயத்தில் ஆர்வம் வருவதற்கும் அவர்கள் இயற்கையோடு இணையவும் இது ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

சரி இப்போது வாங்க அமெரிக்காவில் இயற்கை சூழலில் ஒரு அழகிய தோட்டத்தில் பளுஇபெர்ரி பழங்களை பறிக்கும் அனுபவம் உங்களுக்கு இந்த வீடியோவில் காத்திருக்கிறது. பாருங்க.

- Inkpena சஹாயா

English summary
It was an amazing experience to pick blueberry directly in the farm for the first time.This video is shot in north carolina in USA while picking blueberry in america in farm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X