நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இறுகிய முகத்துடன் கன்னியாகுமரிக்கு வந்து இறங்கிய மோடி.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதில் இருந்தே பிரதமர் மோடி கடுகடுவென்றே இருந்தாராம்.

    பிரதமர் வந்ததும் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தம்பிதுரை, தமிழிசை சவுந்தராஜன் இப்படி எல்லோருமே சென்று வரவேற்றார்கள்.

    பிரதமரை வரவேற்கும் போட்டோக்களும் மீடியாக்களில் வெளியாகின. அவைகளில் ஆளுநரும் முதல்வரும் வாய்நிறைய சிரிப்பில் வரவேற்றாலும், மோடியின் முகம் மலராமல் வாடிப்போயே காணப்பட்டது.

    நிர்மலா சீதாராமனும் தமிழகம்தான்.. அபிநந்தனும் தமிழகம்தான்.. குமரியில் பிரதமர் மோடி பேச்சு! நிர்மலா சீதாராமனும் தமிழகம்தான்.. அபிநந்தனும் தமிழகம்தான்.. குமரியில் பிரதமர் மோடி பேச்சு!

    பூச்செண்டு

    பூச்செண்டு

    அதேபோல, கிரிஜா வைத்தியநாதன் முதல்வரை வரவேற்க பூச்செண்டு எடுத்து கொண்டு முன்னே சென்றார். பிரதமரிடம் பூவை கொடுத்தபோது அதை அவர் வாங்காமலேயே அங்கிருந்து நகர்ந்தார். இதையடுத்து அந்த பூச்செண்டு தவறி கீழே விழுந்துவிட்டதாக தெரிகிறது.

    பிரதமர் மோடி ஒரு நரசிம்ம அவதாரம்... தீவிரவாதிகளை அழித்தவர்... கன்னியாகுமரி விழாவில் ஓபிஎஸ் ஐஸ் மழை பிரதமர் மோடி ஒரு நரசிம்ம அவதாரம்... தீவிரவாதிகளை அழித்தவர்... கன்னியாகுமரி விழாவில் ஓபிஎஸ் ஐஸ் மழை

    சிரிப்பு மிஸ்ஸிங்

    சிரிப்பு மிஸ்ஸிங்

    அதேபோல முதல்வர் உட்பட யாரிடமும் சரியாக முகம் கொடுத்தும் பேசவில்லையாம். எப்போதுமே மோடி எங்கு சென்றாலும், வந்தாலும் ஒரு ட்ரேட் மார்க் சிரிப்பு இருக்கும். ஆனால் அது இப்போது ஏன் மிஸ்ஸிங் என்று தெரியவில்லை.

    அப்செட்

    அப்செட்

    ஒருவேளை "கோ பேக் மோடி" 3-வது முறை ட்ரெண்ட் ஆன கடுப்பில் இருக்கிறாரா அல்லது அல்லது இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அப்செட்டாக இருக்கிறாரா அல்லது எங்காவது வைகோ கருப்பு கொடியுடன் இருப்பதை பார்த்துவிட்டாரா? என தெரியவில்லை. ஆனால் மோடி முகம் வாடி போய் இருந்தது மட்டும் உண்மை!

    சிரித்த முகம்

    சிரித்த முகம்

    அதேசமயம், அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சிரித்த முகத்துடன் பேசியதைக் காண முடிந்தது.

    English summary
    Modi came to Kanniyakumari without any enthusiasm. It is said that he did not speak to the TN Chief Minister also.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X