நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொன் ராதாகிருஷ்ணனை விரட்டியடித்த ஓக்கி!

கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு... காங். வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை- வீடியோ

    நாகர்கோவில்: மறக்க முடியாத ஒக்கி புயல் கடைசியில் பாஜகவை சுழற்றியடித்து விட்டது

    எத்தனையோ துயரங்களைச் சந்தித்த தமிழக மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சந்தித்த சோதனைகள் மிகப் பெரியவை. அதில் முக்கியமானது ஒக்கி புயல்.

    குமரி மாவட்டத்தை உலுக்கிப் போட்ட கொடூரப் புயல் இது. பலஆயிரம் பேர் காணாமல் போனார்கள். பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஆனாலும் நிவாரணப் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்ற குமுறல் மீனவ மக்களை இன்றளவும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

    செஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக! செஞ்ச லட்டெல்லாம் வீணா போச்சே.. அதிமுகவின் பரிதாபம்.. மறுபக்கம் உற்சாகத்தில் திமுக!

    உரிய இழப்பீடு

    உரிய இழப்பீடு

    கன்னியாகுமரியின் கடலோரப்பொருளாதாரத்தையே உலுக்கிய சம்பவம் ஒக்கி புயல். மீனவர்கள் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்தார்கள். பல ஆயிரம் பேரின் நிலை கேள்விக்குறியானது. உரிய இழப்பீடும் கிடைக்காமல், நிவாரணமும் கிடைக்காமல் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

    போர்க்களம்

    போர்க்களம்

    வீதிக்கு வந்து போராடிய மீனவர்கள் எங்களுக்கு தமிழ்நாடு தேவையில்லை. கேரளாவுடனே சேர்ந்து விடுகிறோம் என்றெல்லாம் கோஷமிடும் அளவுக்கு போராட்டங்கள் வெடித்தன. ஊர்கள் எல்லாம் போர்க்களமாக காணப்பட்டன.

    சர்ச்சை

    சர்ச்சை

    அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் மக்களின் குமுறல்களுக்கு உரிய பதிலைச் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில்தான் அங்கு தேர்தல் நடந்தது. அப்போதும் கூட பல ஆயிரம் பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை வெடித்தது. குறிப்பாக மீனவர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.

    பொன் ராதாகிருஷ்ணன்

    பொன் ராதாகிருஷ்ணன்

    இந்த நிலையில்தான் அங்கு பொன் ராதாகிருஷ்ணன் தோல்வியைச் சந்தித்துள்ளார். கடந்த 2014 பொதுத் தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜக சார்பில் வென்றவர். ஆனால் இந்த முறை அவர் வீழ்த்தப்பட்டுள்ளார். இதற்கு பாஜக மீதான கோபம் மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாறாக ஒக்கி புயலின் கோரமும் கூட ஒரு காரமும் என்பதை மறுக்க முடியாது.

    English summary
    The reason for Pon Radhakrishnan's defeat is that it does not get the compensation for firshermen in the Ohi Cyclone
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X