நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு.. சொல்கிறார் பொன்னார்

Google Oneindia Tamil News

Recommended Video

    அனைத்து மத மக்களும் எனக்குதான் ஆதரவு - பொன்.ராதாகிருஷ்ணன்- வீடியோ

    நாகர்கோவில்: அனைத்து மதப்பிரிவு மக்கள் ஆதரவும் தனக்கு இருப்பதாக கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது, இதற்கான பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்,

    இதனிடையே குமரி லோக்சபா தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

    கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை இது வரை நடைபெற்ற தேர்தல்களின் போது இருந்த எழுச்சியை விட பெரிய அளவில் எழுச்சி உள்ளது. ஜாதி, மதம் கடந்து வளர்ச்சியை மட்டுமே மக்கள் பார்கின்றனர். மக்கள் முடிவை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது இருந்த நிலையை விட பலமடங்கு வரவேற்பு உள்ளது.

    அனைத்து பகுதி மக்கள்

    அனைத்து பகுதி மக்கள்

    கடற்கரை பகுதி, அனைத்து மதத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் இந்த வரவேற்பை காண முடிகிறது. குமரி மக்களுக்கு நன்றி கடன்பட்டு உள்ளேன். என் மக்களுக்காக உழப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இன்று குமரி மக்களுக்கு தேவை ஒரு முழு நேர லோக்சபா உறுப்பினர். அழைத்த நேரத்தில் ஓடோடி சென்று குறைகளை தீர்க்கும் எம்.பியைத்தான் மக்கள் விரும்புகின்றனர். பார்ட்டைம் எம்.பியை மக்கள் விரும்பவில்லை.

    விமர்சனம்

    விமர்சனம்

    கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கடந்த முறை எம்.பி தேர்தலில் போயிடும் போது ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். ஆனால் தோல்வியடைந்தார். பின் நான்குநேரி சென்று ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றார். அங்கு அவர் எதுவுமே செய்ய வில்லை. குறைந்த பட்சம் தவித்த வாய்க்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அங்கு ஒன்றும் செய்யாதவர் குமரியில் எதுவுமே செய்ய மாட்டார்.

    ராகுல் காந்தி வரக்கூடாது

    ராகுல் காந்தி வரக்கூடாது

    சகோதரி குஷ்பூ சமீபத்தில் நடந்த சம்பவத்தில் அந்த தவறை செய்தவர் யார் என்ற உண்மையை கூறவில்லை. உண்மையை கூறினால் நன்றாக இருக்கும், பிரதமர் எந்த வகையில் செயல்பட முடியுமோ அந்த வகையில் செயல்பட்டு உள்ளார். அனைத்து விசயங்களும் நாடாளுமன்றத்தில், வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி, பிரதமராக வந்தால் முழித்து கொண்டு இருப்பவன் தூங்கி விடுவான். வளர்சிகள் அனைத்தும் பாழாய் போய்விடும். உலக நாட்டு தலைவர்கள் மத்தியில் நிமிர்ந்து நின்று பதில் சொல்ல காங்கிரஸ் கட்சியில் இது வரை எந்த பிரதமரும் இருந்தது இல்லை.

    மேலும் கொடுக்கும்

    மேலும் கொடுக்கும்

    நாடு வளம்பெற வேண்டும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். குமரிமாவட்டம் மீது மோடி அரசு மிகுந்த கவனம் கொண்டு உள்ளது. ஏற்கனவே கொடுத்து உள்ளது. மேலும் கொடுக்கும். எந்த வளர்ச்சி திட்டமும் அப்பகுதி மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும். எட்டு வழி சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும தடை செய்ய முடியாது. எட்டுவழி சாலை உறுதியான வளர்ச்சி என்பதால் சிலர் தூண்டுதலில் தடை வந்துள்ளது. குமரியில் அமைய இருக்கும் வர்த்தக துறைமுகம் திட்டத்தையும், எட்டு வழி சாலை திட்டத்தையும் ஒப்பிட வேண்டாம். துறைமுகம் திட்டம் குமரியை சேர்ந்த 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரம். இதனை நான் செய்யவில்லை என்றால் அது குமரி மக்களுக்கு நான் செய்யும் துரோகம்.

    தர்ம பத்தினி

    தர்ம பத்தினி

    குமரி மாவட்ட மக்களுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது, ஆடு மாடுகளை விலை கொடுத்து வாங்குவதை போன்று மக்களை வாங்கும் செயலுக்கு நான் உடன்பட மாட்டேன். கடைசி 3 நாட்களில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற வேண்டாம் என முடிவு எடுத்து உள்ளேன், பிச்சைகாரன் பிச்சை எடுக்கும் போது பிச்சை போடுபவரை தர்ம பத்தினி என்பான், பிச்சை போட வில்லை என்றால் மூதேவி என்பான், அதுபோன்றுதான் ஸ்டாலின் பிச்சை எடுக்கிறார், அரசியலுக்காக அவர் எதை வேண்டுமானாலும் சொல்வார். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English summary
    Kanyakumari BJP MP Pon.RadhaKrishnan says he is getting support from all the religious people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X