நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்

Google Oneindia Tamil News

Recommended Video

    காந்தியோட அந்த விருப்பம் மட்டும் நிறைவேறியிருந்தால்.. பொன்.ராதாகிருஷ்ணன் நக்கல்-வீடியோ

    நாகர்கோவில்: காந்திஜி விரும்பிய முக்கிய விஷயங்களில் நடக்காத விஷயம் என்பது சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் அது தேவை இல்லை என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

    அந்த விஷயம் அன்று நடந்து இருந்தால் இன்று நாடு சுபிக்ஷமாக இருந்து இருக்கும் என கன்னியகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் நடைபெற்ற " காந்தி சங்கல்ப யாத்திரை" துவக்க விழாவில் கலந்து கொண்டபோது கூறினார்.

    pon radhakrishnan teases congress on gandhi jayanti day

    மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக சார்பில் " காந்தி சங்கல்ப யாத்திரை" நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும் போது, காந்திஜி விரும்பிய முக்கிய விஷயங்களில் நடக்காத விஷயம் என்பது சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள், அது தேவை இல்லை என்பது.

    ''காங்கிரஸில் எம்.எல்.ஏ. சீட் விற்பனைக்கு''... அசோக் தன்வர் பகீர் குற்றச்சாட்டு''காங்கிரஸில் எம்.எல்.ஏ. சீட் விற்பனைக்கு''... அசோக் தன்வர் பகீர் குற்றச்சாட்டு

    அந்த விஷயம் அன்று நடந்து இருந்தால் இன்று நாடு சுபிக்க்ஷமாக இருந்து இருக்கும். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் துரதிஷ்டவசமானது. செல்வந்தர் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்காக ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    pon radhakrishnan teases congress on gandhi jayanti day

    நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு உளவியல் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். கனரா வங்கி தேர்வில் வடமாநிலத்தவர்களை விட தமிழர்கள் குறைவாகவே விண்ணப்பித்ததால் வடமாநிலத்தவர்கள் அதிகபடியாக தேர்வாகியுள்ளார்கள்.

    அண்ணாமலை பல்கலைகழக பாடத்திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பகவத் கீதை, வாழ்வியலுக்கு வழிகாட்டும் அற்புதமான நூல். வாழ்க்கைக்கான எடுத்துக்காட்டு அதை மதரீதியாக பார்க்கக்கூடாது என தெரிவித்தார்.

    English summary
    Former union minister Pon Radhakrishnan has teased Congress on Gandhi Jayanti day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X