நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Video: நீ நீயாக இரு.. அப்படியே இரு.. அதில் பெருமை கொள்.. அட ஜாலியா இருங்கப்பா

Google Oneindia Tamil News

Recommended Video

    களைகட்டிய AMERICAN STREET FOOD FAIR

    நாகர்கோவில்: கொஞ்சம் தத்துவம் பேசலாமா.. பேசலாமே.. ஆனால் போரடிக்காது.. அப்ப சரி வாங்க பேசலாம்.

    நீ நீயாக இரு ... மற்றவர்களின் சந்தோஷத்துக்காக உன்னை மாற்றிக்கொண்டிருக்காதே. அப்புறம் உன் சந்தோசம் காணாமல் போய்விடும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்... அது எவ்வளவு நிதர்சனமான உண்மை.... (ஓகே தத்துவம் பேசியாச்சு.. இப்ப கட்டுரைக்குப் போலாமா).

    இதை மையமாக வைத்து அமெரிக்காவில் நடந்த ஒரு சூப்பர் விழா பற்றியது தான் இந்த கட்டுரை. அது என்ன நீ நீயாக இரு வாங்க பார்க்கலாம். உன்னை நினைத்து நீ பெருமைப்பட்டு கொள். நீ எப்படி இருந்தாலும் உன்னை ஏற்றுக் கொண்டு நீ பெருமைப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிற ஒரு தினமாக கொண்டாடற நாள் தான் PRIDE.

    பிரைட்

    பிரைட்

    ஹாப்பி PRIDE என்ற வாழ்த்தொலிகளோடு தொடங்கியது விழா... எல்லா பக்கமும் ஹாப்பி பர்த்டே மாதிரி இந்த சத்தம் தான் ஒலித்துக் கொண்டிருந்தது... என்ன என்று புரியாமல் நாங்களும் சொல்ல ஆரம்பித்தோம்.. வேற வழி!

    அப்படியே இரு

    அப்படியே இரு

    இந்த விழாவின் சிறப்பு என்னெவென்றால் உங்களுக்கு பிடிச்ச ஆடையை போட்டு கொள்ளலாம்... நீ லெஸ்பியனா.. திருநங்கையா... கடவுள் நம்பிக்கை இல்லையா ... எந்த மதமோ எந்த இனமோ ... நீ நீயாக இரு.. அப்படியே இரு .... என்று எல்லா வகை மக்களும் தங்களுக்கு பிடித்த மாதிரி அலங்காரங்களோடு வந்து கொண்டாடிய விழா இது.

    ஜாலி கூட்டம்

    ஜாலி கூட்டம்

    கூட்டமோ கூட்டம் ..... அப்படி ஒரு நம்ம ஊரு திருவிழா கூட்டம் என்றாலும் ரொம்ப வித்தியாசமான ஒரு கொண்டாட்டம்... விடியோவை பாருங்க உங்களுக்கே புரியும். உணவு திருவிழா என்றாலே ஒரே கொண்டாட்டம் தான். பல வகை உணவுகளை ஒரு இடத்தில ருசி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    உணவு விழா

    உணவு விழா

    அது போல தான் இங்கு அமெரிக்கா உணவுகள், இத்தாலிய உணவான பீசா,மெக்ஸிகன் உணவு என்று வகை வகை வண்ணங்களோடு உணவு வகைகள்... அப்புறம் பொறித்த சிக்கன் வகைகள் .. இவ்வளவு பெரிசாவா சாப்பிடுவாங்க என்று வான்கோழி கால்களை பார்த்து வாயை பிளந்து நடக்க ஆரம்பித்தோம்.. ஜில்லுனு ஐஸ்கிரீம் ஜூஸ் என்று வாய் குளிர வயிறு லகுளிர நிறைய விஷயங்கள் இருந்தது.

    இசையோடு வாழ்வோம்

    இசையோடு வாழ்வோம் இசையோடு தான் நாங்க எப்போதும் என்பது மேலை நாட்டவர்களின் கொண்டாட்டத்தோடு கலந்தது. இந்த கொண்டாட்டத்தில் இசை மட்டும் அல்ல வகை வகையாய் ஆட்டம் கூட இருந்தது... இதில் ஒரு வித்தியாசமான நடனம் இருந்தது ... கம்ப்யூட்டர் சொல்லும் அசைவை கேட்டு நாம் ஆட வேண்டும்... கம்ப்யூட்டர் தக் தக் என்று நடன அசைவுகளை மாற்ற மாற்ற நடனம் ஆடுபவர் இயந்திரத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாற பார்வையாளர்களுக்கு ஒரே உற்சாகம் என்று செம ஆர்ப்பாட்டம். ரொம்ப ரசிக்கும்படியான விஷயமா இது எங்களுக்கு பட்டது நிச்சயமாய்.

    இந்த சூப்பர் ஜாலி கொண்டாட்டத்தின் வீடியோ இதோ உங்களுக்காக ....

    - Inkpena சஹாயா

    English summary
    USA has celebrated a festival called PRIDE and here you go.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X