நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியை காப்பாற்ற கொண்ட அக்கறை மக்கள் மீது இல்லை.. தமிழக அரசு மீது நல்லகண்ணு புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக அரசு மீது நல்லகண்ணு புகார்-வீடியோ

    நாகர்கோவில்: முகிலன் காணாமல் போய் 100 நாட்களை கடந்து விட்டது, அவரை மீண்டும் உயிரோடு கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

    திருமண விழா ஒன்றில் பங்கேற்ப்பதற்காக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வதுள்ளார்.

     Responsible to save the regime Not on people Nallakannu complaint on TN government

    இந்நிலையில் அங்குசெய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, முகிலன் இருக்கிறார் என கூறுகிறார்கள் ஆனால் எங்கே என்பதுதான் தெரியவில்லை அவரை பத்திரமாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது காவிரி ஆணையத்திற்கு எதிரானது. இதற்கு மத்திய அரசு ஒத்து கொண்டுள்ளது தமிழகத்திற்கு செய்யும் துரோகம். இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார் நல்லகண்ணு

    மேலும் பேசிய அவர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்தே மரபு வழியாக இரு மாநிலங்களும் ஒத்துக்கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டும் என உள்ளது. ஆணையம் என்று வந்த பிறகு கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் என கூறுவது தவறு. மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாத 12 தண்ணீர் திறக்க வேண்டும்.

     Responsible to save the regime Not on people Nallakannu complaint on TN government

    ஆனால் இதை பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து மவுனம் சாதிக்கிறது தமிழக அரசு. ஆட்சியை காப்பாற்றி கொள்ள நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி சிறிதும் கவலைப்பட வில்லை.

    கூடங்குளம் அணு உலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இதனை கைவிட வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு கருத்து சொல்ல கூட அரசு அனுமதி மறுத்து நெருக்கடி கொடுக்கிறது. தமிழக அரசு நீண்ட கால திட்டமிடுத்தல் இல்லாததால் தான் தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்! கூட்டுறவு வங்கிகளில் உள்ள விவசாயக் கடன் தள்ளுபடியா? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்!

    ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களும் சூறையாடி அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தண்ணீர் வியாபாரமாகி விட்டது. தமிழகத்தில் 37,500 ஏரிகள் இருந்தன. இதில் தற்போது 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் விட்டது. ஆறுகள், குளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாதம் ரூ.3 ஆயிரம் குடிநீருக்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நல்லகண்ணு கூறியுள்ளார்.

    English summary
    Mugilan has gone missing for 100 days and has to take the police action to bring him back alive, said the senior Communist Party leader Nallakannu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X