நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் குண்டர்களை வைத்து பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் இடைகோடு பகுதியில் கல்லுபாலம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முன்பு மார்த்தாண்டம் குளப்பாறை வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்து தொடருந்து நிறுத்தாமல் செல்வதாக கூறப்படுகிறது.

    School students attacked by goondas in Nagercoil

    இதனால் மாணவர்கள் பாதிப்பு உள்ளாவதால் இது குறித்து சில மாணவர்கள் அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து அந்த பேருந்தில் பள்ளியின் அடுத்த நிறுத்தத்தில் இருந்து பள்ளி மாணவர்கள் ஏறியதாக கூறப்படுகிறது.

    இடைகோடு மருத்துவமனை சந்திப்பு நிறுத்தில் பேருந்து வந்த போது நடத்துனர் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்தை அந்த பகுதியில் நிறுத்தவே அந்த பகுதியில் நின் ற சிலர் நடத்துனருடன் சேர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் எட்டு மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். படுகாயமடைந்த அபி, வைஷ்ணவ் , ஷாலு ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்னர். இது குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    English summary
    Some Goondas attackes school students in Nagercoil and police are investigating.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X