நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தக்கலை ஆசிரியரின் முரட்டுத்தனம்.. அடி வாங்கிய மாணவன் படுகாயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தக்கலை அருகே ஆசிரியர் அடித்ததில் மாணவன் படுகாயம்-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியர் அடித்ததில் மாணன் படுகாயம் காயமடைந்த மாணவன் தக்கலை அரசு மருத்துவ மனையில் சிகிட்சைக்காக அனுமதி ஆசிரியரிடம் இரணியல் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ஜோஸ்-சகாய அனிதா தம்பதியரின் மகன் 17-வயதான ஜெறின் ஜோசப் வட்டம் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பாடப்பிரிவில் பயின்று வருகிறார்.

    School teacher beats student

    கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி திறந்து ஒருசில வாரங்கள் ஆன நிலையில் தற்போதே மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டு பாடங்களும் முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் அளித்து அவைகளை மனப்பாடம் செய்து தினமும் வகுப்பறையில் ஒப்புவிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில், முறையாக ஒப்புவிக்காத மாணவர்கள் இரவு படிப்புக்காக பள்ளியிலேயே தங்க வைத்து ஒப்புவித்த பின் வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இவ்வாறு ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களும் இதேப்போல் பாட சுமைகளை அளிக்கும் நிலையில் மாணவர்கள் மனப்பாடம் செய்வது சாத்தியமில்லாத நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜெறின்ஜோசப்பிடம் மாலை வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சுமிதா தான் அளித்த வீட்டு பாடத்தை ஒப்புவிக்க கூறியுள்ளார்.

    ஆனால் ஒப்பிவிக்க தெரியாமல் ஜெறின்ஜோஸப் இருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமிதா அவரை சரமாரியாக கம்பால் சரமாரியாக தாக்கியுள்ளார் இதில் மாணவனுக்கு இடது கை மணிக்கட்டு முழங்கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் பள்ளிலேயே தங்க வைத்து இரவு எட்டு மணிவரை தாங்களே வைத்தியம் செய்துள்ளனர்.

    ஆனால் மாணவனுக்கு வலி அதிகரிக்கவே பெற்றோரை அழைத்து ஒப்படைத்தனர் அவர்கள் மகனை சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் இரணியல் போலீசார் ஆசிரியை சுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    English summary
    A school teacher has landed in trouble after beating a student in class room
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X