நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிக்கூடம் போகலாமா.. புத்தகத்தை வாங்கலாமா.. அட அமெரிக்காவில் மேட்டரே வேறங்க!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நம்ம ஊர் பள்ளிக்கூடம் திறந்து மாசமாச்சு . ஆனால் அமெரிக்காவில் கோடை விடுமுறை முடிந்து ஆகஸ்ட் இறுதியில் தான் பள்ளிக்கூடம் திறக்கும் நேரம்.

கோடை விடுமுறை ஜூன் ஜூலை ஆகஸ்ட் என மூன்று மாதம் முடித்து குட்டிஸ் எல்லாம் ஆட்டம் போட்டு முடிச்சாச்சு. (3 மாதமா என்று வாயை பிளக்காதீங்க .. இங்க எல்லாமே வித்தியாசம் தான் ) ஆமாங்க இப்போது அமெரிக்காவில் பள்ளிக்கூடம் திறந்தாச்சு .

things kids should carry to school on first day in USA schools

நம்ம ஊர் பள்ளிக்கூடம் போகணும்னா பெருந்தொகையா ஒரு பணம் கட்டி விட்டு வந்தா போதும் கை நிறைய நோட்டு புத்தகம் என்று அடுக்கி தந்து விடுவார்கள் . நாம வந்து பிரவுன் சீட் போட்டு மேல லேபள் ஒட்டி புள்ளைங்களை கூல் ஆக்க வேண்டியது தான் வேலை .

ஆனால் அமெரிக்காவில் எல்லாமே கொஞ்சம் வித்தியாசம் தான். நம்ம ஊர்ல மளிகை லிஸ்ட் எழுதுற மாதிரி பெருசா ஒரு லிஸ்ட் மெயில் அனுப்ப, பெற்றோர்களாகிய நாம அதை எல்லாம் கடை கடையாய் ஏறி வாங்கி பெரிய பையில் அல்லது பெட்டியில் அடைத்து முதல் நாள் கொண்டு பிள்ளைங்களை விட வேண்டியது தான். அது தான் ஸ்கூல் சப்ளை பொருட்கள். ஆனா இந்த சுமை முதல் நாள் மட்டும் தான். ஏன் என்றால் அதற்க்கு அப்புறம் குழந்தைகள் ஒற்றை பைல் ஒரு நோட்டோடு ஜாலியா போவாங்க. (பார்ரா!)

அமெரிக்க கல்வி முறை எல்லாம் வித்தியாசம் தான். அமெரிக்க பள்ளிகள் எப்படி அங்க எப்படி பாடம் நடத்துவாங்க என்று அடுத்த ஒரு பதிவில் பார்ப்போம். இப்போ அவங்க கல்வி முறைக்கு என்ன மாதிரி பொருட்கள் எல்லாம் குழந்தைகளுக்கு வாங்க சொல்றாங்க என்று இந்த பதிவில் பார்ப்போம். கத்திரி முதல் டிஸ்யூ பேப்பர் வரை வாங்க சுவாரஸ்யமான விஷயங்கள் என்னவெல்லாம் பள்ளிக்கு கொடுத்து அனுப்பணும் என்று இந்த வீடியோவில் பாருங்க.

- Inkpena சஹாயா

English summary
This story about the bunch of things kids should carry to school on first day in USA schools.... back to school supply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X