நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு குமரியில் அஞ்சலி.. மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பேரணி

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை மனித வெடிகுண்டு வெடிப்புகள்.. 7 தீவிரவாதிகளின் பெயர்கள் வெளியானது!- வீடியோ

    நாகர்கோவில்: குண்டுவெடிப்பில் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் மும்மத்தை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையவும், இது போன்ற துயர சம்பவம் ஏற்படாமல் இருக்கவும் மெழுகுவர்த்தி ஏந்திய பொதுமக்கள் சமாதானத்தை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

    Tribute to Lankan victims in Kanyakumari

    இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வுகள் உலக அளவில் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை இலங்கை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தும் கண்டித்து வருகின்றன.

    மதுரையில் பரபரப்பு.. பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலைமதுரையில் பரபரப்பு.. பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை

    இந்நிலையில் இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கருப்புக் கொடி அணிந்தும் மெழுகுவர்த்தி ஏந்தியும் ஊர்வலமாக சென்றும் பொதுமக்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

    Tribute to Lankan victims in Kanyakumari

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் இருந்து இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக கையில் தீவிரவாதத்திற்கு எதிரான பதாதைகளுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.

    தொடர்ந்து தங்கள் கையில் ஏந்தி வந்த மெழுகுவர்த்தியை ஓர் இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மும் மதங்களை சேர்ந்த மத குருமார்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    English summary
    Hundreds of people paid rich tribute to the victims of Lankan blasts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X