நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில்..அடிக்குது வெயிலு.. ஆனாலும் வெளியிலேயே சுத்துறாங்கய்யா! Video

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நம்மில் பெரும்பாலும் படித்து முடித்ததும் பல பேருக்கு வெளிநாடு போக வேண்டும் . பெரும் சம்பாத்தியம் பண்ண வேண்டும் என்ற ஆசை உண்டு. சிலர் இதை தங்கள் வாழ்க்கை குறிக்கோளாகவே வைத்திருக்கார்கள்.

அதிலும் நம்மில் பலருக்கு அமெரிக்கா போகணும் என்ற கனவு வெகு நாட்களாக இருக்கிறது. என்ன தான் டொனால்டு டிரம்ப் விசாவில் கெடுபிடி காட்டினாலும் நம்மில் பலர் இன்னும் அமெரிக்காவை நோக்கி எப்படியோ ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

US faces hot summer this year

சரி அமெரிக்காவில் வாழ்க்கை எப்படி இருக்கும். நண்பர்களின் முக நூல் பக்கத்தில் பனி படர்ந்த இடத்தில ஒரு கோட் போல ஜாக்கெட் போட்ட பெரிய சட்டைக்குள் சிரித்துக் கொண்டிருக்கும் நண்பனின் உருவம் பார்த்து அமெரிக்கா பற்றிய கற்பனை நம்மில் கொஞ்சம் இருக்கும்.

இன்னும் சிலருக்கு அங்குள்ள இடங்கள் எப்படி இருக்கும்? அதை எல்லாம் சுற்றி பார்த்தால் எப்படி இருக்கும் என்ற பேராவல் இருக்கும். அந்த ஆசை உங்களுக்கு இருந்தால் இனி வரப் போகும் பதிவுகள் உங்கள் ஆசையை பூர்த்தி செய்யும். உங்களை அமெரிக்காவுக்கு அலேக்காக தூக்கி போக தான் இந்த பதிவுகள்.

US faces hot summer this year

நம்ம ஊர் மாதிரி கோடை காலம் அப்புறம் குளிர் காலம் என்று இல்லாமல் அமெரிக்காவில் மொத்தம் 4 காலங்கள். குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம் என்று விரியும் இந்த 4 காலமும் அங்கு எப்படி இருக்கும் .

இந்தியாவில் இருந்து அங்கு போகும் நம் மக்களுக்கு அங்கு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த வீடியோவில் பாருங்க. அமெரிக்கா வாழ்க்கை எப்படி என்று நீங்க என்ன நினைக்கிறீங்க என்ற கருத்தையும் பதிவு செய்யுங்கள்.

அது சரி.. இப்பஅங்க என்ன காலம் தெரியுமா.. நல்ல வெயில் காலம்.. வெளுத்து வாங்குதாம் வெயில்.. ஆனாலும் அமெரிக்கர்கள் வெயில் காலத்தில்தான் அதிகமாக வெளியில் சுற்றுவார்கள். அதற்கான காரணத்தையும் அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.

சுவாரஸ்ய பக்கங்கள் தொடரும்!

- Inkpena சஹாயா

English summary
The summer is very scorching this year in the USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X