நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Video: அமெரிக்காவை அலற விட்ட கொரோனா.. என்னய்யா இது.. வால்மார்ட்டே காலியா கிடக்கு!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு அதிர வைக்கிறது. பாதிப்பு மக்களுக்கு இல்லை.. மக்களோட மனசுக்குத்தான். அந்த அளவுக்கு பயம் அப்பிக் கிடக்கிறது.

Recommended Video

    அமெரிக்காவில் கொரானாவில் நிலை என்ன?

    விளைவு.. பொருட்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்து விட்டனராம். கொரோனா பரவி விட்டால் என்னாவது என்ற அச்சத்தில் மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர்.

    வழக்கமாக கிறிஸ்துமஸ் காலத்தில்தான் பெருமளவில் அமெரிக்கர்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். ஆனால் இப்போது அதே போன்ற ஒரு அவசர நிலை உருவாகியுள்ளது.

     கொரோனாவால் பீதி

    கொரோனாவால் பீதி

    ஆனால் இந்த முறை கொரோனா பீதி காரணமாக பொருட்களை வாங்குவது பல மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கத்தை விட அதிக அளவில் பொருட்கள் வாங்குவதாக வால்மார்ட் நிறுவனரே கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்டு பேசிய அதிபர் டிரம்ப் கூட, மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பதட்டப்பட வேண்டாம். பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

     பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள்

    பொருள் வாங்கிக் குவிக்கும் மக்கள்

    ஆனால் மக்கள் அமைதியாக இருக்கத் தயாரில்லை. கிடைக்கும் பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிப்பதால் வால்மார்ட் போன்ற பெரிய கடைகள் எல்லாமே பொருட்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறதாம். இதுகுறித்து நமது வாசகர் சகாயதேவி போட்டுள்ள ஒரு வீடியோவில் அங்குள்ள நிலவரம்.. அல்ல அல்ல.. பய கலவரத்தின் வீரியத்தை உணர முடிகிறது.

     2 வாரம் லீவு

    2 வாரம் லீவு

    கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பள்ளிகளுக்கு இரண்டு வாரம் லீவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆலயங்களில் கூட்டு வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது . மக்களின் தனி பிராத்தனைக்காக ஆலயம் திறந்து தான் இருக்கும். நூறு பேருக்கு மேல கூடும் விழாக்களை கூட்டங்களை எல்லாம் ரத்து செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது .

    வெறிச்சோடும் வால்மார்ட்

    கடைகளில் எந்தப் பொருளும் இல்லையாம். அப்படி வெறிச்சோடிக் கிடக்கிறதாம். பொருட்கள் அதிகமாக இல்லை. அமெரிக்கர்கள் கடைகளுக்குப் படையெடுத்து பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்கு. சிக்கன் மட்டன்தான் அங்கு அதிகமாக இருக்கும். பெரும்பாலும் பேக்ட் புட்தான். வால்மார்ட்டுக்குப் போனால் எப்போது வேண்டுமானாலும் இந்த உணவு கிடைக்கும்.

     டிரம்ப் சொல்றதைக் கேளுங்கய்யா

    டிரம்ப் சொல்றதைக் கேளுங்கய்யா

    ஆனால் இப்போது எல்லாவற்றையும் வாரி எடுத்துக் கொண்டு போய் விட்டனர் மக்கள். உணவு பொருட்கள் வாங்க கடைகளுக்கு சென்றால் நிலைமை எப்படி இருக்கு என்று நீங்களே பாருங்க. வீடியோ எடுக்கப்பட்ட இடம் வால்மார்ட், வடக்கு கரோலினா அமெரிக்கா... மக்களே.. தைரியமா இருங்கப்பா.. பயப்படாதீங்க.. இப்படி அவசரப்பட்டு பதட்டப்பட்டு பொருட்களை வாங்கிக் குவித்து அதற்கு வேறு பஞ்சம் வந்து விடப் போகுது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

    - இங்க்பேனா

    English summary
    Wall Mmart shops are becoming dry as people thronged there to buy Goods as Corona Virus panic engulfs the entire country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X