நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னைத் தாக்கிய மளிகை கடைக்காரர் போதையில் இருந்தார்.. அவர் ஒரு கிரிமினல்.. ஜெயமோகன் ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    என்னை தாக்கியவர் போதையில் இருந்தார் ஜெயமோகன் ஆவேசம்

    நாகர்கோவில்: என்னைத் தாக்கிய கடைக்காரர் கிரிமினல் பின்னணி கொண்டவர் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபல திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகன் வாங்கிய தோசை மாவு கெட்டு போனது எனக் கூறி திரும்ப கொடுத்தபோது ஏற்பட்ட பிரச்னையால் கடைக்காரரால் தாக்கப்பட்டார்.

    தாக்கிய கடைக்காரரை போலீசார் கைது செய்து விசாரணை. ஜெயமோகன் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    why jayamohan was attacked by grocery shop owner

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் வசித்து வரும் பிரபல திரைக்கதை எழுத்தாளர் ஜெயமோகன். எந்திரன், இந்தியன் 2, சர்க்கார் உள்ளிட்ட திரைப்படங்களில் திரைக்கதை எழுதியுள்ளார்.

    தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்!தோசை மாவு ஏன் இப்படி புளிக்குது? திருப்பிக்கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கிய கடைக்காரர்!

    இவர் நேற்று தனது வீட்டருகே உள்ள கடையில் தோசை மாவு வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது மாவு கெட்டு போனது என்பது தெரிய வந்த நிலையில், கடைக்காரரிடம் திரும்ப கொடுத்தபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    அதன் உச்சகட்டத்தில் ஜெயமோகனை கடைக்காரர் தாக்கியதாகவும் அதோடு விடாமல் அவரது வீட்டிற்கு சென்றும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த ஜெயமோகன் தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    why jayamohan was attacked by grocery shop owner

    இது குறித்து விசாரணை மேற்கொண்ட நேசமணி நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததோடு, கடைக்காரர் செல்வம் என்பiரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் குறித்து ஜெயமோகன் கூறுகையில், கடைக்குப் போய் மாவு வாங்கினேன். வீட்டிற்கு வந்து பார்த்தபோது அது எக்ஸ்பைரி டேட் தாண்டியிருந்தது தெரிய வந்தது. இதனால் கொடுத்து விட்டு வேறு வாங்குமாறு எனது மனைவி கூறினார்.

    நானும் கடைக்கு திரும்பி வந்தேன். அங்கு கடைக்காரரின் மனைவி தான் இருந்தார். அவரிடம் மாவைக் கொடுத்து வேறு தருமாறு கேட்டேன் . அதற்கு அவர் நல்ல மாவுதான் என்றார். இல்லை என்று கூறி தேதியைக் காட்டி நல்ல மாவுதான் என்றார். நான் ஏற்கவில்லை. புதிய மாவு தர அவர் மறுத்ததால் நான் அங்கேயே மாவைப் போட்டு விட்டேன்.

    அப்போது அவரது கணவர் அங்கு வந்தார். வந்தவர் நல்ல போதையில் இருந்தார். என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென அடிக்கத் தொடங்கி விட்டார். அவரை மற்றவர்கள் வந்து விலக்கி விட்டனர். அந்தக் கடைக்காரர் கிரிமினல் பின்னணி கொண்டவர். அவர் தாக்கியதில் வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றேன் என்றார் ஜெயமோகன்.

    English summary
    Writer Jayamohan has said that he was attacked by the grocery shop owner for opposing contaminated rice flour.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X