• search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"அதை" நசுக்கும் அளவுக்கு.. பிளே ஸ்கூல் காயத்ரிக்கு அவ்ளோ கோபமா.. "இழப்பை" தாங்க முடியாததால் ஆவேசம்

|

நாகர்கோவில்: கள்ளக்காதலனை இழக்க காயத்ரிக்கு மனசே இல்லை.. அதனால் கூலிப்படைவரை சென்று, கணவனை கொலை செய்ய ஐடியா போட்டுள்ளார்.. கூலிப்படையினர் வீட்டுக்குள் நுழைய வசதியாக, கதவை திறந்து வைத்து கொண்டு உட்கார்ந்தும் இருந்திருக்கிறார்.. இப்படி ஒரு பகீர் கிளப்பும் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது.

வெட்டூர்ணிமடம் அருகே கேவச திருப்பபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்.. இவர் ஒரு போடோகிராபர்.. 31 வயதான மனைவி பெயர் காயத்ரி.. 4 வயசில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் 5 நாளைக்கு முன்பு நைட் ரேம் கணேஷ் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர்.

சாமியாரின் ஆணுறுப்பு வெட்டிய வழக்கில் புதிய திருப்பம்- அறுத்தது பெண்ணின் பாய் பிரண்ட்!

 கத்தி

கத்தி

அவரது தலையில் கத்தியால் வெட்டிவிட்டு, ஆணுறுப்பையும் நசுக்கி சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.. அப்போது கணேஷ் போட்ட சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து திரண்டு வந்து கணேஷை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு மண்டை ஓடு பிளந்து கிடந்தது.. அதனால் உடனடியாக 3 நேரம் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டு, தற்போதும் ஐசிவியூவில்தான் உள்ளார்.

காயத்ரி

காயத்ரி

ஆனால், கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று காயத்ரி சொன்னாலும், மண்டை எப்படி உடையும், ஆணுறுப்பு எப்படி நசுக்கப்பட்டிருக்கும் என்று உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால் காயத்ரி மீது கணேஷின் தம்பி வடசேரி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில்தான் விசாரணை ஆரம்பமானது.

 கல்யாணம்

கல்யாணம்

அப்போது காயத்ரி பற்றின பல திடுக் தகவல்களும் வெளியாயின.. வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு பிளே ஸ்கூலில் காயத்ரி டீச்சராக வேலை பார்த்து வந்திருக்கிறார். மதுரையை சேர்ந்தவர் காயத்ரி.. கல்யாணத்துக்கு முன்பே யாசின் என்பவரை காதலித்து வந்துள்ளார்.. ஆனால் காயத்ரி வீட்டில் இந்த காதலை ஏற்கவில்லை.. அதனால் உடனடியாக மாப்பிள்ளை பார்த்து கணேஷை கட்டி வைத்துவிட்டனர்.. இருந்தாலும் காயத்ரி யாசினுடன் தொடர்பிலேயே இருந்தார்.

 வீட்டு பத்திரம்

வீட்டு பத்திரம்

ஒருகட்டத்தில் தன்னுடன் எப்பவுமே காயத்ரி இருக்க வேண்டும் என்று யாசின் விரும்பினார்.. அதற்காகவே காயத்ரி வசிக்கும் பகுதியில் ஒரு ப்ளே ஸ்கூல் தொடங்கி ஐடியா போட்டார்.. ஆனால் அதற்கு போதுமான காசு இல்லை.. இதை பார்த்த காயத்ரி, கணேஷ் பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை தனது அண்ணனுக்கு வேண்டும் என்று சொல்லி எடுத்து கொண்டார்.

கள்ளக்காதல்

கள்ளக்காதல்

அதை அடமானமாக வைத்து யாசினுக்கு தந்து 10 லட்சம் ரூபாய் புரட்டி தந்துள்ளார்.. ப்ளே ஸ்கூலும் ஆரம்பிக்கப்பட்டது. காயத்ரியை டீச்சராக உட்கார வைத்துவிட்டார் யாசின். இப்போது 2 பேருமே ஜாலியாக சுதந்திரமாக ஊர் சுற்றினார்கள்.. இந்நிலையில், ஒருநாள், தன் வீட்டு பத்திரம் குறித்து காயத்ரி அண்ணனிடம் கணேஷ் கேட்க முயன்றார்.. ஆனால் தன் அண்ணனிடம் பேச விடாமல் தடுத்து கொண்டே இருந்தார் காயத்ரி. இது கணேஷூக்கு சந்தேகத்தை தந்தது.

 பின்பக்க கதவு

பின்பக்க கதவு

இப்படிப்பட்ட சமயத்தில்தான் கணவனை கொன்றுவிடுவது என்று காயத்ரி முடிவு செய்தார்.. இதற்காக ஒரு கூலிப்படைக்கு 2 லட்சம் தந்து அழைத்து வந்தனர். சம்பவத்தன்று கணேஷ் தூங்கிய நேரம், யாசினுக்கு காயத்ரி தகவல் சொல்ல, அவர் கூலிப்படையை உள்ளே அனுப்பியிருக்கிறார். அதற்குள் காயத்ரி பின்புற கதவை திறந்து வைத்துவிட்டு எதுவுமே தெரியாததுபோல் படுத்து கொண்டார்.

விசாரணை

விசாரணை

இதற்கு பிறகுதான் கூலிப்படையினர் கணேஷின் மண்டையை பிளந்துள்ளனர்.. இன்னொரு பெண்ணுடன் தவறான உறவு காரணமாகவே இந்த கொலை நடந்திருப்பதுபோல, ஆணுறுப்பையும் நசுக்கிவிட்டு சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.. இப்போதைக்கு அந்த கூலிப்படையினர் 2 பேர், மற்றும் காயத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.. யாசினை தேடி வருகிறார்கள்.. இது சம்பந்தமாக தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
wife tries to kill husband and confessed to nagarcovil police
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X