நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ.. அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு.. அன்புமணி ராமதாஸ் சாடல்

ஆசிரியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ

    நாமக்கல்: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமாகும்போதே, அதாவது கடந்த 5 தினங்களுக்கு முன்பே இது சம்பந்தமாக பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

    "அரசு ஊழியர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதே. அவை எல்லாம் ஒன்றும் புதிய கோரிக்கைகள் இல்லை, நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் கோரிக்கைகள்தான்.

    அவற்றை நிதி சுமை காரணமாக நிறைவேற்றாமல் நிறைவேற்ற முடியவில்லை என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

    ஆசிரியர்களுக்கு ஆதரவு

    ஆசிரியர்களுக்கு ஆதரவு

    உண்மையிலேயே அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிக நிதி தேவைப்படாது என்பதால் உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

    திருச்செங்கோடு

    திருச்செங்கோடு

    ஆனால் இப்போது ஒருவாரம் ஆகியும் இன்றும் போராட்டம் வலுத்து வருவதால், அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து மீண்டும் கருத்து கூறி உள்ளார். திருச்செங்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:

    முற்றிலும் தவறு

    முற்றிலும் தவறு

    "ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது. அரசு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வினை உடனடியாக எடுக்க வேண்டும். மாணவர் தேர்ச்சிக்கு ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும்" என்றார்.

    மேகதாது விவகாரம்

    மேகதாது விவகாரம்

    தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அளிக்கும் விரிவான அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    PMK Anbumani Ramadoss accused that the manner in which the TN Govt handles of the Jacto Geo struggle is entirely wrong.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X