நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டுமாம்.. சொல்வது எச். ராஜா!

வைகோ நாவடக்கத்துடன் பேச வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - எச். ராஜா- வீடியோ

    நாமக்கல்: வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் திமுகவுடன் இருப்பது சில்லறை கட்சிகளே என்று ஸ்டாலினையும் பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

    விவசாயிகளை பிரதமர் மோடி 5 நிமிஷம்கூட சந்திக்காமல் இருக்கிறார் என்று கோபத்தில், "விதவிதமாக டிரஸ் பண்ணுகிறார் என்றும், நாளுக்கு ஒரு நாடு பறக்கிறார்" என்றும் வைகோ கூறியிருந்தார்.

    வைகோவின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் எல்லாருமே 2 நாளாக வறுத்தெடுத்து வருகிறார்கள். ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவுகள் பதிவிட்டதுபோக, எங்கெல்லாம் தமிழக பாஜக தலைவர்கள் செல்கிறார்களோ, அங்கெல்லாம் வைகோவை திட்டி வருகிறார்கள்.

    அளந்து பேச வேண்டும்

    அளந்து பேச வேண்டும்

    இன்றும்கூட நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் எச்.ராஜா பேசும்போதும் வைகோவை கடுமையாக சாடினார். கூடவே ஸ்டாலினையும் விடவில்லை. அப்போது எச்.ராஜா சொன்னதாவது: "பிரதமர் மோடி குறிவைத்து வைகோ விமர்சிக்கும் போது வார்த்தைகளை அளந்து பேசவேண்டும். தானே புயல் பாதிப்பு ஏற்பட்டபோது

    கருணாநிதி பார்த்தாரா?

    கருணாநிதி பார்த்தாரா?

    தானே புயல் பாதிப்பு ஏற்பட்டபோது அப்போதை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டாரா? ஸ்டாலின் தேவையில்லாமல் மோடியை சீண்ட வேண்டாம். திமுகவுடன் இருப்பது சில்லறை கட்சிகள் தான், மாவட்ட அளவில் கூட செயல்பாடு இல்லாத கட்சிகள் தான் இன்று திமுகவுடன் உள்ளன.

    மனிதாபிமானமற்றது

    மனிதாபிமானமற்றது

    திமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலினால் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள போராட்டம் என்பது மனிதாபிமானமற்றது. தற்போது அறிவித்துள்ள போராட்டத்தை வாபஸ் பெறுவதுடன் ஒரு மாதம் கழித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும்.

    கமலுக்கு தகுதி இல்லை

    கமலுக்கு தகுதி இல்லை

    தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவது ஏற்புடையதல்ல. எந்த இயற்கை பேரிடர் என்றாலும் 20 நாள் ஒரு மாசம் ஆனாலும் மத்திய குழு ஆய்விற்கு வந்ததில்லை. ஆனால் கஜா புயலுக்கு 3 நாளிலேயே வந்துவிட்டனர். வீடுகள் பாதிப்படைந்துள்ளதால், இதற்காக மத்திய அரசு 6500 கோடி ஒதுக்கும். எனவே வாழ்நாள் முழுவது மக்களை சுரண்டி சம்பாதித்த கமல்ஹாசன் மத்திய அரசை விமர்சிப்பதற்கு தகுதி கிடையாது.

    உயிரற்ற பெரியார்

    உயிரற்ற பெரியார்

    உயிரற்ற பட்டேலுக்கு சிலை எதற்கு என கனிமொழி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, தமிழகம் முழுவதும் உயிரற்ற பெரியாருக்கு ஏன் சிலை வைக்கப்பட்டுள்ளதே என எச். ராஜா பதில் கேள்வி எழுப்பினார்.

    English summary
    BJP H.Raja said MDMK Vaiko needs to know about respect the person
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X