நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்று முதல் 3 நாட்களுக்கு முதலமைச்சர் சூறாவளி பிரச்சாரம்... இன்றைய நிகழ்ச்சிகளின் முழு விவரம் இதோ..!

Google Oneindia Tamil News

நாமக்கல்: வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் நாமக்கல் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மூன்று நாட்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

வழக்கமான வேன் பிரச்சாரத்தை தவிர்த்து பொதுமக்கள், ஓட்டுநர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்டோரை நேரில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

முதலமைச்சரின் இன்றைய தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளின் விவரம் பின்வருமாறு;

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம்

  • காலை 8.30 -9.00 நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வழிபாடு - கோயில் வளாக வியாபாரிகளுடன் சந்திப்பு.
  • காலை 9.10 -9.50 நாமக்கல்லில் லாரி மற்றும் கோழிப்பண்ணை தொழிலதிபர்களுடன் சந்திப்பு.
  • காலை 10.30 -11.00 ராசிபுரத்தில் அருந்ததியினர் காலனியில் வீடு வீடாக சென்று பிரச்சாரம்.
  • காலை 11.00 -11.30 ராசிபுரம் அருந்ததியினர் காலனியில் பொதுக்கூட்டம்.
மதிய நிகழ்ச்சிகள்

மதிய நிகழ்ச்சிகள்

  • இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சிறிது நேரம் உணவு இடைவேளை எடுத்துக்கொள்கிறார் முதல்வர்.
  • மதியம் 1.00 -1.40 திருசெங்கோடு டவுன் பேருந்து நிலையத்தில் பிரச்சாரம்.
  • மதியம் 1.50-2.30 திருச்செங்கோட்டில் போர்வெல் லாரி உரிமையாளர்களுடன் சந்திப்பு.
  • மதியம் 3.10 -3.50 குமாரபாளையத்தில் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்திப்பு.
பரமத்தி வேலூர்

பரமத்தி வேலூர்

  • மாலை 5.00 -5.40 பரமத்தி வேலூரில் விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்.
  • மாலை 6.30 -7.00 நாமக்கல்லில் பொதுக்கூட்டம் -அதற்கு முன்னதாக பிரம்மாண்ட பேரணி.
  • இரவு 7.45 -8.20 நாமக்கல்லில் முதலியார் சமுதாய பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு.
  • இரவு 8.30 -9.10 நாமக்கல்லில் அருந்ததியினர் சமுதாய பிரதிநிதிகளுடன் முதல்வர் சந்திப்பு.
எங்கெங்கு

எங்கெங்கு

இன்றைய தினம் நாமக்கல், ராசிபுரம், திருசெங்கோடு, குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட இடங்களில் மட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறார். மீண்டும் நாளை காலை சேந்தமங்கலத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர் திருச்சி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

English summary
CM Edappadi palanisami Election campaign for 3 days from today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X